வாட்ஸ் அப் நிறுவனம் புதிய வசதிகளை தருவது மட்டுமன்றி ஏற்கனவே இருக்கும் சில விஷயங்களை மேம்படுத்தி வருகிறது. இந்த வரிசையில் இப்பொழுது மாற்றியமைக்கப்பட்டிருக்கும் விஷயம் “Delete for every one”.
இதற்கு முன்பு நீங்கள் அனுப்பிய மெசேஜை அனைவருக்கும் நீக்க வேண்டுமென்றால் 1 மணி நேரம் 8 நிமிடத்திற்குள் செய்யவேண்டும். இல்லையெனில் நீங்கள் யாருக்கு அனுப்பினீர்களோ அவர்களுக்கும் இந்த மெசேஜை உங்களால் நீக்க முடியாது. இதை இப்பொழுது வாட்ஸ் அப் நிறுவனம் மாற்றியமைத்துள்ளது. இன்னும் கூடுதல் நேரம் தரப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் அனுப்பிய மெசேஜை 2 1/2 ( 2 நாள் 12 மணி நேரம் ) நாளுக்குள் உங்களால் நீக்க முடியும் அதாவது யாருக்கு அனுப்பினீர்களோ அவர்களுக்கும் சேர்த்து நீக்க முடியும். இந்த வசதி இன்று பீட்டா பதிவு வைத்துள்ள சிலருக்கு வந்துள்ளது. வரும் நாட்களில் அனைவருக்கும் இந்த வசதி வரும்.
கீழே உள்ள படங்கள் பார்க்கவும். நேற்று இரவு நான் அனுப்பிய மெசேஜ் இன்று மாலை டெலீட் செய்ய முடிகிறது
இதை தொடர்ந்து வாட்ஸ் அப் குழுக்களில் வாட்ஸ் அப் அட்மின் எந்த ஒரு மெசேஜையும் டெலீட் செய்யும் வசதி விரைவில் வர உள்ளது.
இரண்டாவது ஆப்ஷன் நல்ல ஆப்ஷன்.