பொதுவாய் இணையவெளியில் நாம் உபயோகப்படுத்தும் ஸ்டோரேஜ் சர்வீஸ்கள் அனைத்துமே வெளிநாட்டு நிறுவனங்களுடையது. இந்த துறையில் எனக்குத் தெரிந்து பெரிதாய் எந்த இந்திய நிறுவனமும் இறங்கவில்லை. இப்பொழுது முதல் முறையாக “Digiboxx” என்ற இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்த துறையில் இறங்கியுள்ளது.
நேற்றுதான் இதன் சேவைகள் துவங்கப்பட்டது. 20 ஜிபி ஸ்டோரேஜ் வரை இலவசமாகத் தருகிறார்கள். அதே போல் 2 டிபி ஸ்டோரேஜ் வருடத்திற்கு ரூபாய் 360 மட்டுமே. இது இரண்டுமே தனிநபர்களுக்கு போதுமானதாக இருக்கும். நிறுவனங்களுக்கு மேம்பட்ட வசதி உண்டு. அதற்கு கட்டணமும் அதிகம். கீழே ஸ்க்ரீன்ஷாட் தந்துள்ளேன்.
கணிணி , ஆன்ட்ராய்ட் , ஐஓ எஸ் என மூன்று பிளாட்பார்ம்களில் இருந்தும் இதை உபயோகப்படுத்த முடியும். நான் இன்னும் உபயோகப்படுத்த துவங்கவில்லை. இன்னும் சில நாட்களில் இதை உபயோகப்படுத்தி பார்த்துவிட்டு அது தனியாக எழுதுகிறேன்.
இணையத்தள முகவரி : https://digiboxx.com/