Disappearing messages Available to all – Whatsapp

வாட்ஸ் அப் செயலியில் பலரும் நீண்ட காலமாய் எதிர்பார்த்த / கேட்ட வசதி தானே அழியும் மெஸேஜ். இது ஏற்கனவே சிக்னல் செயலியில் இருக்கும் வசதி. அதாவது நீங்கள் அனுப்பும் மெசேஜ் / படம் / வீடியோவை குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு தானே டெலிட் ஆவது போல் செட் செய்ய முடியும். இந்த வசதி விரைவில் இப்பொழுது பயன்பாட்டிற்கு வந்துள்ளது .

ஆன்ட்ராய்ட் மொபைலில் யாருக்கு இந்த “Disappearing Message : அனுப்ப விரும்புகிறீர்களோ அவர்களுடனான அரட்டையில் வலது மூலையில் இருக்கும் “view Contact ” க்ளிக் செய்யவும்.

பின் “Disappearing messages ” என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

அதன் பின் இந்த வசதி வேண்டுமா இல்லை வேண்டாமா என்பதை தேர்வு செய்யவும்

இந்த வசதி தேர்வு செய்து அனுப்பும் மெசேஜ்கள் ஏழு நாட்களில் அழிந்துவிடும். ஆனால் அதற்கு முன்னால் அந்த மெசேஜ் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்டாலோ இல்லை போட்டோ சேமித்து வைக்கப்பட்டாலோ அழியாது. ஒரு முறை இந்த வசதியை “on ” செய்துவிட்டால் மீண்டும் “off ” செய்யும் வரை அனுப்பும் மெசேஜ் அனைத்தும் 7 நாட்களில் அழியும்.

யாருக்கு இந்த “Disappearing message ” அனுப்புகிறீர்களோ அவர்களுக்கு ஒரு லேபிளுடன் இந்த மெசேஜ் செல்லும்

வாட்ஸ் அப் டெஸ்க்டாப் வெர்ஷனிலும் இதேதான் நடைமுறை

About Author