தொழில்நுட்பம் நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டும் மாறி கொண்டும் உள்ளன. இந்நிலையில் புதிய மாற்றங்களை ஏற்றுக் கொள்ள மாட்டோம் எனக் கூறி கொண்டிருந்தால் இழப்பு நமக்குத்தான். இங்கு சாதாரண எட்டு வழி சாலை அமைக்கவே பல போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதுவும் வருமா என உறுதியாக இப்பொழுது தெரியவில்லை. உத்திரபிரதேச மாநிலம் நோய்டாவில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஜீவார். இங்கே புதிதாய் விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தை நோய்டா நகரத்துடன் இணைக்க புதிய ஓட்டுநர் இல்லாத “pod taxi” உபயோகிக்க ஆலோசனை நடந்து வருகிறது.
இந்த முறையில் விபத்துகளை என்பதே இல்லை எனக் கூறுகின்றனர். அதே போல் இதற்காக ஒரு கிலோமீட்டருக்கு பாதை அமைக்க நாற்பதில் இருந்து நாற்பத்தைந்து கோடி வரை ஆகிறது. ஆனால் மெட்ரோ பாதை அமைக்க அதே ஒரு கிலோமீட்டருக்கு 135-150 கோடி வரை ஆகும். எனவே இது ஒரு வகையில் செலவை குறைக்கும். அதே சமயத்தில் இது முழுக்க முழுக்க பாட்டரி அல்லது ஹைட்ரஜனில் இயங்குவதால் இதன் மூலம் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படாது என Ultra PRT நிறுவனம் கூறுகிறது. இந்த நிறுவனம் இந்த “Pod Taxi ” நிறுவனம் ஆகும். வெளிநாட்டில் பல்வேறு நகரங்களிலும் இது உபயோகிக்கப்படுகிறது என சொல்கின்றனர்.
இந்த பாட் டாக்சி பற்றி உத்திரபிரதேச முதல்வர் திரு யோகி யுடன் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் இது குறித்து முடிவெடுக்கப்படும் முடிவெடுக்கப்படும் எனவும் அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தீரேந்திர சிங் கூறியுள்ளார்.