விண்டோஸ் 10ல் நியூஸ் மற்றும் வெதர் அப்டேட் னு ஒரு ஆப்ஷன் இருந்தது. இந்த Edge bar கிட்டத்தட்ட அதே போன்ற ஒன்று. அதே சமயத்தில் புதிதாய் வந்திருக்கும் விண்டோஸ் விட்ஜெட் ஆப்ஷனில் இருக்கும் சில வசதிகளும் இதில் உண்டு. மற்ற இரண்டும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இந்த எட்ஜ் பார் வசதி எட்ஜ் பிரவுசர் இருந்தால் மட்டுமே வேலை செய்யும். எனவே இது பிரவுசரை அடிப்படையாகக் கொண்டது.

எட்ஜ் பிரவுசரை துவக்கியவுடன் மேலே இருப்பது போல் ஆப்ஷன் வரும். அதில் முதலில் இருக்கும் ஆப்ஷனை தேர்வு செய்தால் edge bar கணிணியில் வேலை செய்ய துவங்கும்.

அதாவது உங்கள் டெஸ்க் டாப் ஸ்க்ரீனில் இருந்து கொண்டே புதிய செய்திகளை படிப்பது, வெதர் அப்டேட் போன்றவற்றையே செய்யலாம். அதக்கென்று தனியாக வெப் சைட் ஓபன் செய்ய வேண்டாம். ஹெட்லைன் இப்படியே படித்துக் கொள்ளலாம். அதே போல் அவுட்லுக் மெயில் ஐடியில் வரும் மெயில்களையும் படித்துக் கொள்ள முடியும். அதில் கொடுத்திருக்கும் வெப் சைட் இல்லாமல் வேறு வெப் சைட் வேண்டுமென்றாலும் இணைத்துக் கொள்ள முடியும். கீழே நான் இணைத்திருக்கும் வெப் சைட் க்ரிக் இன்போ
அதே போல் இங்கிருந்து எந்த ஹெட் லைன் க்ளிக் செய்தாலும் எட்ஜ் பிரவுசரில் மட்டுமே ஓபன் ஆகும். எனக்கு தெரிந்து க்ரோம் பிரவுசர் அளவு இன்னும் வசதிகள் வராவிட்டாலும் க்ரோம் பிரவுசரை விட எட்ஜ் வேகமாக இருப்பதாக படுகிறது. ஆனால் இன்னும் மக்களிடையே அதிகமாக பாப்புலர் ஆகவில்லை.
அதே போல் உங்களுக்கு வேண்டாத நேரங்களில் இது சுருங்கி உங்கள் டெஸ்க் டாப் ஸ்க்ரீனில் வலது பக்கத்தில் இருக்கும். சிறிய எட்ஜ் ஐகானுடன் வட்ட வடிவில் இருக்கும். அதை க்ளிக் செய்தால் எட்ஜ் பார் ஓபன் ஆகும்.