அடிக்கடி நாம் இணையத்தில் சில செய்திகளை காணலாம். ஏதாவது ஒரு நிறுவனத்தின் தகவல்கள் திருடப்பட்டன என செய்திகள் வரும். நாமும் படித்துவிட்டு கடந்துவிடுவோம். சமீபத்தில் truecaller செயலியின் டேட்டா விற்பனைக்கு வந்தது என ஒரு செய்தி வந்தது நினைவிருக்கலாம். இதில் சாமானியர்கள் நாம் எப்படி பாதிக்கப்படுவோம் என பலரும் யோசிப்பார்கள்.
நேரடியாக பாதிப்பு என்று எதுவும் இல்லை. ஆனால் மறைமுக பாதிப்பு உண்டு. ஒரு தளம் “xyz.in” இருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். அதில் நீங்கள் உங்கள் தகவல்களை எதோ ஒரு காரணத்திற்காக கொடுத்து உள்ளீர்கள். இப்பொழுது அந்த தளத்தின் டேட்டா திருடப்பட்டது என்றால் அதில் நீங்கள் அளித்த உங்கள் விவரமும் இருக்கும். திருடப்பட்ட தகவல்கள் “Dark Web” எனப்படும் தளங்களில் விற்பனைக்கு வரும். அதை ஸ்பேம் மெயில் அனுப்புபவர்கள் வாங்கி உங்களுக்கு தொடர்ந்து ஸ்பேம் மெயில் அனுப்பலாம் அல்லது பிஷ்ஷிங் மெயில் அனுப்பலாம்.
மொபைல் நம்பர் திருடப்பட்டால் அது ஸ்பேம் அழைப்பாளர்களுக்கு விற்கப்படலாம். அதே போல் “சிம் ஸ்வாப் ” ஸ்கேமில் ஈடுபடுபவர்களுக்கு அதை வாங்கலாம். உங்கள் மெயில் ஐடி இந்த மாதிரி திருடப்பட்டுள்ளதா என கண்டறியலாம். அதற்கு இந்த தளத்திற்கு செல்லுங்கள். அங்குள்ள டெக்ஸ்ட் பாக்சில் உங்கள் மெயில் ஐடியை கொடுக்கவும். உங்கள் ஐடி திருடப்பட்டுள்ளதா (email ID leak) என்பதை உடனடியாக சொல்லிவிடும். ஸ்க்ரீன்ஷாட் கீழே தரப்பட்டுள்ளது.
முதல் இரண்டு ஸ்க்ரீன்ஷாட் மெயில் ஐடி திருடப்பட்டுள்ளது என்பதையும் எந்த தளத்தில் நடந்த டேட்டா திருட்டு என்பதையும் காட்டுகிறது. மூன்றாவது ஸ்க்ரீன்ஷாட் மெயில் ஐடி திருடப்படவில்லை என்பதை காட்டுகிறது.