End-To-End Encrypted Backups – Whatsapp

வாட்ஸ் அப் செயலியை பொறுத்தவரை நீங்கள் அனுப்பும் சாட் மெசேஜ்கள் / போட்டோ / வீடியோ மற்றும் நீங்கள் செய்யும் வாட்ஸ் அப் அழைப்புகள் என்று அனைத்துமே என்க்ரிப்ட் செய்யப்பட்டது. நடுவில் யாரும் ஹேக் செய்ய முடியாது என்பது கம்பெனியின் அறிக்கை. ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் இந்த என்க்ரிப்ஷன் கிடையாது. அது எது ?

QuestionsAnswers
Name of the featureEnd-To-End Encrypted Backups
Available for public Not yet. It is still under testing

வாட்ஸ் அப்பை பொறுத்தவரை நீங்கள் உங்கள் சாட் பேக் அப் எடுக்கும் பொழுது அது கூகிள் ட்ரைவில் மட்டுமே சேமிக்க இயலும். ஆனால் இந்த பேக் அப் என்க்ரிப்ட் செய்யப்பட்டதில்லை. எனவே இது ஒரு பாதுகாப்பு குறைப்பாடாக கருதுகிறது. அதை இப்பொழுது மாற்ற சோதனை செய்து வருகின்றனர்.

End-To-End Encrypted Backups இன்னும் சோதனையில்தான் உள்ளது. உபயோகிப்பாளர்களுக்கு இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் எப்படி இருக்கும் என தெரியவந்துள்ளது. இந்த ஸ்க்ரீன்களை வைத்து பார்க்கும் பொழுது உங்கள் பேக் அப் செய்யும் பொழுது நீங்கள் பாஸ்வேர்ட் மூலம் அதை பாதுகாத்துக் கொள்ளலாம். ஆனால் பாஸ்வேர்ட் மறந்துவிட்டால் ஒன்றும் செய்ய இயலாது.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.