சில வருடங்களாகவே இந்தியாவிற்கான சோஷியல் மீடியா செயலி இல்லை என்பது பலருக்கும் உறுத்தலாகவே இருந்து வந்தது. elyments போன்ற சில செயலிகள் வந்தாலும் அவை facebook போன்று முழுமை அடையவில்லை என்பதால் பலரும் பயன்படுத்துவதில்லை. இப்பொழுது இந்தியாவிற்கான செயலி இந்தியாவில் இருந்து வந்துள்ளது. Explurger என்பதே அந்த செயலி. இன்னும் உலக அளவில் லான்ச் ஆகலை. வரும் சனிக்கிழமை இந்திய சுதந்திரத்தனமான ஆகஸ்ட் 15 அன்று இதை குளோபல் லான்ச் பண்றாங்க.
முதலில் இது யாருக்கானது என சொல்லிவிடுகிறேன். அதிகம் பயணிப்பவர்கள் அவர்கள் பயணித்த தூரம் , இடங்கள் பயணித்த இடங்களின் போட்டோ என்று ஒரு முழுமையான ட்ரேவலாக் (Travelogue) உருவாக்கி கொள்ளலாம்.
இதன் சிறப்பு என்னவென்றால் , வெறும் போட்டோ / வீடியோ மட்டும் பகிராமல் , நீங்கள் சாதாரணமாக பேஸ்புக்கில் எழுதுவது போல் எழுதி பகிரலாம். அங்கிருந்து நேரடியாக உங்கள் பேஸ்புக் , ட்விட்டர் டைம் லைனில் பகிர்ந்து கொள்ளலாம்.
இதில் பதிவு செய்ய ஈமெயில் / போன் இந்த இரண்டில் எதாவது ஒன்றை கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். டைம்லைன் (பேஸ்புக் போன்றே ) உங்கள் பதிவுகளையும் நீங்கள் யாரையெல்லாம் பின்பற்றுகிறீர்களோ அவர்களின் பதிவுகள் மற்றும் அவர்களின் பயண அனுபவங்கள் வரும்.
பேஸ்புக்கில் எப்படி ஷேர் வசதி உள்ளதோ அதே போல் இதில் spread. அந்த படத்தை / பதிவை பற்றிய உங்கள் கருத்துடன் பகிர say & spread. குறிப்பை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது இது பயணத்திற்கான செயலி. பேஸ்புக் போன்ற வசதிகளும் இருந்தாலும் முக்கிய நோக்கம் பயண விவரங்கள் . மேலே நீங்கள் பார்க்கலாம் என் பெயருக்கு அருகிலே எத்தனை மைல் என்று காட்டும். நான் போகும் இடங்களின் விவரத்தை பகிர பகிர அது மாறும்.
இந்த செயலியை கொஞ்ச நாள் பேஸ்புக் மாதிரி உபயோகித்து பார்க்கலாம் என்று எண்ணுகிறேன். இந்த செயலியை டவுன்லோட் செய்ய