Facebook App – Back in Microsoft Store

எப்படி ஆண்ட்ராய்ட் / ஐஓஎஸ் இரண்டிலும் தனித்தனி ப்ளே ஸ்டோர் இருக்கிறதோ அப்படி விண்டோஸிலும் இருக்கவேண்டும் என்றுக் கொண்டு வரப்பட்டதுதான் windows Store. ஆனால் பெரும்பான்மையிலான பயனாளர்கள் அதன் மூலம் நிறுவாமல் தனியாக டவுன்லோட் செய்தே உபயோகம் செய்கின்றனர். Facebook App விண்டோஸ் ஸ்டோரில் மார்ச் 1 2020க்கு முன்புவரை இருந்தது. ஆனால் அதன் பின் இந்த வசதியை பேஸ்புக் நிறுவனம் நிறுத்தி விட்டது. அதற்கு எந்தக் காரணமும் சொல்லவில்லை.

இந்நிலையில் இன்றுமுதல் மீண்டும் Facebook App விண்டோஸ் ஸ்டோரில் கிடைக்கிறது. நீங்கள் உங்கள் கணிணி பிரவுசரில் எப்படி உபயோகம் செய்வீர்களோ அதே போன்று இதில் உபயோகிக்கலாம். இது பேஸ்புக்கின் டெஸ்க்டாப் வெர்ஷனின் செயலி வடிவம் (PWA).

அடிப்படை தேவைகள்

  1. விண்டோஸ் 10 இயங்குதளத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டுடன். குறைந்தது 19003.0  இது வேலைசெய்யாது என சொல்கின்றனர்.
  2. கண்டிப்பாக லேட்டஸ்ட் மைக்ரோசாப்ட் எட்ஜ் இருத்தல் அவசியம். எட்ஜ் பிரவுசர் இல்லையெனில் வேலை செய்யாது என சொல்லுகின்றனர்.
Facebook app

விண்டோஸ் ஸ்டோரை ஓபன் செய்து , வலது மேல் மூலையில் உள்ள தேடும் இடத்தில் “facebook” என தேடவும். பேஸ்புக் செயலி வரும். அதிலுள்ள “get” என்ற பட்டனை அழுத்தினால் பின்னணியில் இன்ஸ்டால் ஆகும். பின் நீங்கள் ஸ்டார்ட் மெனு சென்று ஓபன் செய்து கொள்ளலாம். நாம் ஓ=பிரவுசரில் உபயோகிக்கும் அதே வடிவமைப்பில் வரும். இது பீட்டா பதிப்பே. எனவே சில பிரச்சனைகள் வரலாம்.

facebook app

About Author