சென்ற வருடம் இந்தியாவில் டிக் டாக் தடையை தொடர்ந்து அந்த இடத்தை பிடிக்க பல புதிய செயலிகள் வந்தன. அதே சமயத்தில் ஏற்கனவே அதிகம் அறிமுகமான பேஸ்புக் நிறுவனம் பேஸ்புக், மற்றும் இன்ஸ்டாகிராம் இரண்டிலும் குறு வீடியோக்கள் வெளியிடும் வசதியை கொண்டுவந்தது. Facebook Short videos மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என அழைக்கப்பட்டது. இப்பொழுது இரண்டிலும் கணிசமான அளவு பயனாளர்கள் வீடியோக்கள் வெளியிட்டுவருகின்றனர். இது வரை இது சோதனையில்தான் இருந்தது. இப்பொழுது இந்த பேஸ்புக் வீடியோவை அதிகாரபூர்வமாக பேஸ்புக் அறிவித்துள்ளது. ஷார்ட் வீடியோ என்பதை மாற்றி ரீல்ஸ் என்று பெயரிட்டுள்ளனர். ஆனாலும் இன்னும் செயலியில் அதே பெயரில்தான் வருகிறது. இனி வரும் நாட்களில் மாறலாம்.
Facebook Short videos யை பேஸ்புக்கில் மட்டுமே பகிர இயலும். இங்கிருந்து நேரடியாக இன்ஸ்டாகிராமிற்கு பகிரும் வசதி இன்னும் வரவில்லை. அதே போல் இன்ஸ்டாகிராமில் இருந்து ரீல்ஸ் போடும் வீடியோக்களை நேரடியாக பேஸ்புக்கில் பகிரும் வசதி ஒரு சிலருக்கு மட்டும் வந்துள்ளது சோதனை அடிப்படையில். விரைவில் மற்றவருக்கும் வரலாம்.
How to create Facebook short videos
இது மிக எளிதான விஷயம்.
- பேஸ்புக்கில் உங்கள் டைம்லைனில் ஸ்டேட்டஸ் பதிவு செய்யும் அதே கட்டத்தில் கீழே புதிதாய் “short videos” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
- இப்பொழுது நீங்கள் புதிதாய் உங்கள் மொபைல் கேமிரா மூலம் வீடியோ உருவாக்கலாம் அல்லது கேலரியில் சென்று ஏற்கனவே இருக்கும் வீடியோவை தேர்வு செய்யலாம்.
- வீடியோ ரெக்கார்ட் செய்த பின் அதற்கு ஸ்பெஷல் எபெக்ட் / டெக்ஸ்ட் சேர்ப்பது இவற்றையும் செய்ய இயலும். ஆடியோ வேண்டுமென்றால் அவர்கள் கொடுத்துள்ள பாடல்களில் சிலவற்றை தேர்வு செய்யலாம்
- வீடியோவை பற்றி சிறிய விளக்கம் சேர்த்து வீடியோவை வெளியிடலாம். இதில் தேவையான குறி சொற்களையும் சேர்க்கலாம்.