Tiktok இந்தியாவில் தடை செய்யப்பட்டதில் இருந்தே அதனுடைய இடத்தைப் பிடிக்க பல்வேறு செயலிகளும் போட்டி போட்டுகொண்டுள்ளன. இந்தியாவில் உருவாக்கப்பட்ட செயலிகளுடன் பேஸ்புக் , இன்ஸ்டாக்ராம் (இதுவும் பேஸ்புக் ரெண்டும் ஒண்ணுதான்) போட்டியிடுகின்றன. சமீபத்தில் இன்ஸ்டாக்ராமில் Reels என ஒரு ஆப்ஷன் கொண்டுவந்தார்கள். அதே போல் சோதனை முயற்சியாக Facebook Short Videos இந்திய பயனாளர்களுக்கென இப்பொழுது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
பேஸ்புக் மொபைல் செயலியில் இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது . இதற்கென தனியாக ஆப்ஷன் கொடுக்கப்படவில்லை. உங்கள் டைம் லைனில் short videos என்று வரும். அதை க்ளிக் செய்தால் கீழே உள்ளவாறு வீடியோ ஓபன் ஆகும். பல்வேறு ஷார்ட் வீடியோக்கள் வரும். நீங்கள் ஷார்ட் வீடியோ உருவாக்க விரும்பினால் “Create” என்ற பட்டனை க்ளிக் செய்தால் வீடியோ எடுக்க இயலும்.
இதில் வழக்கமாய் ஒரு பதிவிற்கு லைக் செய்வது , பகிர்வது என அனைத்து வசதிகளும் உள்ளது. இப்பொழுது இது சோதனை முயற்சியில்தான் உள்ளது. எனவே சில பயனாளர்களுக்கு இந்த “short videos” இன்னும் வராமல் இருக்கலாம் அல்லது ஒரு சிலருக்கு வந்து திடீரென காணாமல் போகலாம். எப்படியாவது இந்தியாவில் தங்களின் மார்க்கெட்டை இன்னும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளது பேஸ்புக்.
கூகிளின் யூட்யூபும் இதே போன்று ஒரு சோதனை முயற்சியில் இருப்பதாக தெரிகிறது. பார்ப்போம் யார் அந்த மார்க்கெட்டை கைப்பற்ற போகிறார்கள் என. சொல்வதற்கில்லை. இவர்கள் அதை நெருங்குவதற்குள் ரிலையன்ஸ் நிறுவனம் Tiktok செயலியை வாங்கி இருக்கலாம்