மீண்டும் ஒரு மால்வேர் கண்டறியப்பட்டுள்ளது. இம்முறை கண்டறியப்பட்டுள்ள இந்த மால்வேர் வழக்கம்போல் கூகிள் ப்ளே ஸ்டோரில் உள்ள ஒரு ” FlixOnline ” போலி செயலியின் மூலமே பரவுகிறது.
FlixOnline எப்படி பரப்புகிறது?
இந்த செயலி நெட் ப்ளிக்ஸில் இலவசமாக பல வீடியோக்களை பார்க்க உதவுவதாக அதன் விவரக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் அதை இன்ஸ்டால் செய்தவுடன் அது உங்களுக்கு வரும் வாட்ஸ் அப் மெசேஜ்களை கண்காணிக்க துவங்குகிறது. அதோடு மட்டுமில்லாமல் அந்த மெசேஜ்களுக்கு தானாக கீழ்க்கண்ட மெசேஜை ரிப்ளை அனுப்புகிறது.
“2 Months of Netflix Premium Free at no cost For REASON OF QUARANTINE (CORONA VIRUS)* Get 2 Months of Netflix Premium Free anywhere in the world for 60 days. Get it now
இந்த செயலி இதன் மூலம் உங்களின் தனிப்பட்ட விவரங்களை திருடி அதற்கு கட்டளைகளை அனுப்பும் சர்வருக்கு அனுப்பக்கூடும். எனவே இந்த செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டாம்.
இந்த மாதிரி இலவசமாக ஏதாவது ஆபர் என்றால் தயவு செய்து அதை க்ளிக் செய்ய வேண்டாம். இது போன்ற ஏதாவது ஒரு சிக்கல் இருக்கும்.