Galaxy M21 gets Android 11 Update

பொதுவாக ஆண்டிராய்டு நிறுவனங்கள் தங்களின் மொபைல்களுக்கு அதிகமான பாதுகாப்பு அப்டேட்களையோ அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்க்ரேட்களோ தருவதில்லை. ஆனால் சாம்சங் நிறுவனம் தனது மிட் ரேஞ் மற்றும் பட்ஜெட் மொபைல்களுக்கு நான்கு வருட அப்டேட்களை கொடுக்கின்றது. அதாவது இரண்டு வருடம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்க்ரேட் மற்றும் அதற்கு மேல் இரண்டு வருடம் பாதுகாப்பு அப்டேட்கள். இந்த பாலிசியின் மூலம் பட்ஜெட் மொபைலான Galaxy M21 க்கு இப்பொழுது Android 11 அப்டேட் வந்துள்ளது.

இந்த அப்டேட்டின் firmware எண் M215FXXU2BUC8 மற்றும் இதன் சைஸ் 960 எம்பி. எனவே உங்கள் Galaxy M21 மொபைலை அப்டேட் செய்யும் முன் வயர்லெஸ் நெட்ஒர்க்கில் கனெக்ட் செய்துகொள்ளவும். அதே போல் பேட்டரி 70% இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். இந்த அப்டேட் மூலம் சாம்சங் OS ஆன One UI யின் பதிப்பு 3.1க்கு மாறும்.

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.