Global Voice Note Player

Global Voice Note Player – Android 2.22.7.11

வாட்ஸ் அப் மெசேஜ்களில் வாய்ஸ் நோட் பற்றி அனைவருக்கும் தெரியும். ஒரு வாய்ஸ் மெசேஜ் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது நீங்கள் மற்றுமொரு சாட் ஓபன் செய்தால் இந்த மெசேஜ் நின்றுவிடும். அதாவது அந்த வாய்ஸ் மெசேஜ் முழுக்க கேக்க அதே விண்டோவில் தான் இருக்கனும். இப்பொழுது இதை மாற்றி Global Voice Note Player என்ற வசதியை கொண்டுவந்திருக்கிறார்கள். இந்த வசதி ஏற்கனவே ஐஒஸ் பீட்டா பதிப்பிலும், விண்டோஸ் டெஸ்க் டாப் பதிப்பிலும் உள்ளது. இப்பொழுதுதான் ஆன்ட்ராய்ட் பீட்டா செயலி 2.22.7.11 பதிப்பில் கொண்டுவந்துள்ளனர்.

Global Voice Note Player

பீட்டா செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இன்னும் அனைவருக்கும் இந்த வசதி வரவில்லை. ஒரு சில பீட்டா செயலி உபயோகிப்பாளர்களுக்கே இந்த வசதி வந்துள்ளது. எனவே உங்களுக்கு இந்த வசதி வரவில்லை எனில் ஒரு சில நாட்கள் காத்திருக்கவும் . இந்த வசதி எப்படி உபயோகப்படுத்தி பார்ப்பது.

ஏதாவதொரு சாட் விண்டோவில் இருக்கும் வாய்ஸ் நோட்டை ப்ளே செய்யவும். அது ப்ளே ஆகும் பொழுதே வேறு ஒரு சாட் விண்டோ ஓபன் செய்யவும். இப்பொழுது ப்ளேயர் பார் மேலே இருக்கும். அப்படி அந்த பார் மேலே இருந்தால் இந்த வசதி உங்கள் வாட்ஸ் அப் செயலியில் வந்துள்ளது என்பது உறுதி. இல்லையேல் காத்திருக்கவும். இந்த ப்ளேயர் பார் வாய்ஸ் நோட் கு மட்டுமல்ல வாய்ஸ் அழைப்புகளுக்கும்தான். இதன் ஸ்க்ரீன் ஷாட் கீழே

Global Voice Note Player
PC:https://wabetainfo.com/

About Author