மின்னஞ்சல் கண்டுபிடித்த நாளில் இருந்து மாறாத ஒன்றுள்ளது. அது நம் பாஸ்வேர்ட் ஹேக் செய்யப்படுவது. இன்றைய சூழலில் நாம் பல இணையதளங்களில் ( ஜிமெயில், பேஸ்புக், ட்விட்டர் etc ) உபயோகப்படுத்துகிறோம். பல சமயங்களில் நம் பாஸ்வேர்ட் ஹேக் செய்யப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் நமக்கு வரும் . உடனே நாம் பாஸ்வேர்ட் மாற்றி விடுவோம் . ஆனால் உறுதியாக நம் பாஸ்வேர்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என நமக்குத் தெரியாது. இப்பொழுது கூகிள் அதற்கு ஒரு டூலை வடிவமைத்துள்ளது. “Google Chrome Password Checker“ என்ற இந்த டூல் மூலம் நம் பாஸ்வேர்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாது நம் பாஸ்வேர்ட் ஸ்ட்ராங் அல்லது வீக் என்ற விஷயத்தையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.
How to check Password is hacked or not ?
இதற்கு முதலில் ஒரு விஷயம். நீங்கள் எந்த பாஸ்வேர்டை சோதிக்க விரும்புகிறீர்களோ அந்த பாஸ்வேர்ட் கூகிள் பாஸ்வேர்ட் ஆட்டோ பில் மூலம் சேமிக்கப்பட்டிருக்க வேண்டும்.
- உங்கள் கூகிள் க்ரோம் பிரவுசரில் வலது பக்கம் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும்
- அதில் செட்டிங்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்யவும்
- பின்பு வரும் மெனுவில் இடது பக்கம் இருக்கும் “Auto Fill ” ஆப்ஷனை தேர்வு செய்யவும்
- பின்பு “Password” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்
- இப்பொழுது “Check password “ என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால் “Google Chrome Password Checker” டூல் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் பாஸ்வேர்ட்களை சோதித்து அதில் இருக்கும் பாஸ்வேர்ட் ஹேக் செய்யபட்டிருந்தால் மாற்ற சொல்லும்.
- அதே போல் வீக் பாஸ்வேர்ட்களையும் மாற்ற சொல்லும்.