கூகிள் நிறுவனம் இதுவரையில் கூகிள் போட்டோஸ் சேமித்து வைக்க இலவசமாக ஸ்டோரேஜ் ஸ்பேஸ் குடுத்துவந்துள்ளது. இது ஜூன் 1ல் இருந்து மாறப்போகிறது. ஜூன் 1க்கு பிறகு நீங்கள் Google Photos இல் சேமிக்கும் படங்கள் எடுத்துக்கொள்ளும் இடம் கூகிள் இலவசமாக குடுக்கும் 15 ஜிபி இடத்தில் சேரும். எனவே கவனமாக இல்லையெனில் கூகிள் ட்ரைவில் இடம் இல்லை என்ற பிரச்சனை வரும்.
பொதுவாக , சில மொபைல்களில் உங்கள் மொபைலில் இருக்கும் படங்கள் அனைத்தும் Google Photos இல் தானாக பேக் அப் ஆகும் வசதி இருக்கும். அதை மாற்றி தேவைப்படும் பொழுது நீங்கள் பேக் அப் எடுப்பதுபோல் மாற்றி அமைத்துக் கொள்ளவும்.
உங்கள் மொபைலில் கூகிள் போட்டோஸ் செயலியை ஓபன் செய்யவும்.
வலது மேல் மூலையில் உங்கள் ஐடி இருக்கும். அதை க்ளிக் செய்தால் கீழே இருக்கும் மெனு வரும். அதில் “Don’t Backup” என்பதை தேர்வு செய்யவும்.
இது ஒரு வழி. மற்றொரு வழி , வாரம் ஒருமுறை கூகிள் போட்டோஸில் சென்று தேவையில்லாத போட்டோக்களை அழிக்கவும்.