பேஸ்புக்கில் பல்வேறு பிரைவசி வசதிகள் இருந்தாலும் தனிப்பட்ட ஒருவரின் பதிவில் கமெண்ட் போட முடியாமல் தவிர்க்கும் வசதி இதுவரை இல்லை. பேஸ்புக் க்ரூப் அல்லது பக்கங்களில் இந்த வசதி ஏற்கனவே உண்டு. இப்பொழுது தனிப்பட்ட ஒருவரின் டைம்லைனில் போடப்படும் பதிவுகளிலும் கமெண்ட்களை போட முடியாமல் செய்யலாம். நேரடியாக கமெண்ட்களை நிறுத்தும் வசதி இல்லை என்றாலும் அவர்கள் கொடுத்துள்ள வேறு ஒரு வசதி மூலம் இதை செய்யலாம். இந்தப் பதிவில் “disable comments in Facebook” எப்படி என்று பார்ப்போம்.
Disable comments in Facebook
- எந்தப் பதிவில் கமெண்ட்களை தவிர்க்க வேண்டுமோ அந்தப் பதிவிற்கு செல்லவும்
- அந்தப் பதிவின் வலது மேல் மூலையில் இருக்கும் மூன்று புள்ளிகளை தொடவும்
- இப்பொழுது வரும் மெனுவில் ” Who can comment on your post” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்
- இப்பொழுது ” Public / Friends / @ profiles and Pages you mention “ என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
- இப்பொழுது இந்தப் பதிவில் வேறு யாரும் கமெண்ட் செய்ய முடியாது. அந்தப் பதிவில் நீங்கள் டேக் செய்யும் நபர்கள் மட்டுமே கமெண்ட் செய்ய இயலும். எனவே யாரையும் டேக் செய்யாமல் பதிவு செய்து விட்டு இந்த ஆப்ஷனை தேர்வு செய்து கொண்டால் யாரும் பதிவில் கமெண்ட் செய்ய இயலாது.
- கமெண்ட் disable செய்யப்பட பதிவுகளில் மற்றவர்களுக்கு கடைசி படத்தில் இருப்பது போல் மெசேஜ் வரும்.