How to get new Google Chat (Early Access)

ஜிமெயில் சாட் , மெயில் எல்லாம் தனியாக இருந்தது ( ஆன்ட்ராய்ட்). இப்பொழுது அவற்றை இணைத்து ஒரே செயலி/ஸ்க்ரீனில் கொண்டு வந்துள்ளனர். ஏற்கனவே கூகிள் மீட் ஜிமெயில் ஸ்க்ரீனுடன் இணைக்கப்பட்டிருந்தது அனைவருக்கும் தெரிந்ததே. கூகிள் ஹாங் அவுட் / கூகிள் சாட் அவ்வளவு பிரபலமான பலரும் உபயோகப்படுத்தும் மெசேஞ்சர் அல்ல. பெரும்பாலும் வாட்ஸ் அப் மற்றும் வேறு சில செயலிகள் உபயோகித்தாலும் இன்னும் இந்த கூகிள் சாட் உபயோகப்படுத்துவோர் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர். இந்த வசதி (Google Chat (Early Access) ) இன்னும் அனைவருக்கும் டிபால்ட்டாக வராது. செட்டிங்ஸ் சென்று நாம்தான் மாற்ற வேண்டும்.

Warning : Its still in early stages, You can expect some bugs like crashing etc. Activate only if you are comfortable

மொபைலில் இந்த வசதியை பெற

  1. முதலில் மொபைலில் ( ஆண்ட்ராய்ட் மட்டுமே) ஜிமெயில் செயலி அப்டேட்டாக உள்ளதா என பார்த்துக் கொள்ளவும்.
  2. பின் உங்கள் ஜிமெயில் செயலியை துவக்கவும். அதில் இடது பக்கம் உள்ள ஹேம்பர்கர் மெனுவை க்ளிக் செய்யவும்
  3. செட்டிங்ஸ் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்
  4. இப்பொழுது உங்கள் மொபைலில் நீங்கள் இணைத்துவைத்துள்ள ஜிமெயில் ஐடிகள் காணப்படும்
  5. எந்த ஐடிக்கு இந்த வசதி வேண்டுமோ அதை தேர்வு செய்யவும்.
  6. இப்பொழுது அதில் “Chat” என்ற ஆப்ஷனின் கீழ் “Google Chat (Early Access)” தேர்வு செய்யவும்.
  7. உங்களை உறுதி செய்ய சொல்லும். பின் ஸ்க்ரீன் ரீ லோட் ஆகி வரும்பொழுது புதிய மாற்றங்களை காண்பீர்கள்.

இதே வசதியை உங்கள் கணிணியில் பெற

  1. பிரவுசரில் ஜிமெயில் ஓபன் செய்யவும்.
  2. வலது மேல் பக்கம் இருக்கும் செட்டிங்ஸ் பட்டன் ( வீல் மாதிரி இருக்கும்) க்ளிக் செய்யவும்
  3. பின் “load More settings ” கிளிக் செய்யவும்
  4. வலது பக்கம் கடைசியாக “chat and meet ” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்
  5. இப்பொழுது “Google Chat (Early Access)” என்ற ஆப்ஷனை தேர்வு செய்து “save changes ” கிளிக் செய்யவும்

கீழே படங்கள்

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.