இணையம் துவங்கியக் காலகட்டத்தில் இருந்தே போலி ஐடிகள் பிரச்சனை உண்டு. ஆனால் பேஸ்புக்கில் சமீபகாலமாய் நிலவும் பிரச்சனை வேறு மாதிரி. அதாவது ஏற்கனவே உங்கள் நட்பு வட்டத்தில் இருப்பவரின் ப்ரோபைலை அப்படியே நகலெடுத்து இன்னொரு ப்ரொபைல் உருவாக்கி அனைவருக்கும் நட்பு அழைப்பு அனுப்புவது. அப்படி அனுப்பும் நட்பு அழைப்பை ஏற்பவர்களிடம் மெசெஞ்சரில் சிக்கலில் இருப்பதாய் கூறி காசு கேட்பது என்று இந்த பிரச்சனை சில காலமாய் ஓடுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும் , ஏற்கனவே நம் நட்பில் இருப்பவரின் பெயரில் இன்னொரு அழைப்பு வரும் பொழுது எப்படி அறிந்து கொள்வது ? கீழே பார்ப்போம்
முதலில் அழைப்பு அனுப்பவரின் ப்ரோபைலுக்கு செல்லுங்கள்
அங்கு அவர் DP க்கு கீழே வலது பக்கம் மூன்று புள்ளிகள் இருக்கும். அதை க்ளிக் செய்யுங்கள்
இப்பொழுது கீழே அவரது ப்ரொபைல் லிங்க் இருக்கும். அதில் பாருங்கள். உண்மையான நபர் எனில் அவர் ஐடி அந்த லிங்கில் இருக்கும். ( சில சமயம் எண்கள் இருக்கும். அந்த சமயத்தில் ஒன்றும் செய்ய இயலாது). போலியான ஐடி எனில் அங்கு உங்கள் நண்பரின் பெயருக்கு பதில் வேறு பெயர் இருக்கும். நீங்கள் அந்த நட்பு அழைப்பை ஏற்காமலேயே நீக்கி விடலாம்.
இது 100% உறுதியான முறை அல்ல. ஆனாலும் எதுவுமே செய்யாமல் ஒரு போலி நட்பு அழைப்பை ஏற்பதற்கு பதில் இப்படி செய்யலாம்.