PC Health Check tool

PC Health Check tool – Check your PC eligibility for Windows 11

ஜூன் மாதம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் Windows 11 இன் சோதனை வடிவத்தை வெளியிட்டபொழுது இந்த PC Health Check tool ம் வெளியிடப்பட்டது. ஆனால் சில நாட்களிலேயே இதை நிறுத்திவிட்டனர் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தினர். காரணம் இதில் இருந்த தவறுகள்தான். இந்த டூல் வெளியிட்டதற்கு முக்கிய காரணம் இந்த டூல் சோதிக்கும் கணிணி Windows 11 இன்ஸ்டால் செய்ய தகுதியானதா அதில் இன்ஸ்டால் செய்தால் பிரச்சனை இன்றி இயங்குமா என்பதை அறியவே. ஆனால் இந்த டூல் சோதனை முடிவுகளை தவறாக காட்டத் துவங்கியதால் உபயோகிப்பாளர்களிடையே குழப்பம் வந்தது. எனவே இந்த டூலை இவ்வளவு நாள் நிறுத்தி வைத்திருந்தனர். இப்பொழுது மீண்டும் உபயோகிப்பாளர்கள் இந்த டூலை டவுன் லோட் செய்யலாம். இந்த டூலை டவுன் லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

மிகவும் சிறிய அளவிலான PC Health Check tool டவுன்லோட் விரைவிலேயே முடிந்துவிடும். பின்பு மற்ற விண்டோஸ் மென்பொருள் நிறுவுவது போலவே இதையும் செய்யவும். பின் அதை இயக்கினால் முதலில் வருவது கீழே இருக்கும் ஸ்க்ரீன்,

PC Health Check tool, Windows 11

அதில் உங்கள் கணிணி பற்றிய விவரங்கள் இருக்கும். அதில் இருக்கும் ” Check Now “ பட்டனை க்ளிக் செய்யவும். உங்கள் கணிணியை சோதித்து உங்கள் கணிணியில் விண்டோஸ் 11 இன்ஸ்டால் செய்ய முடியுமா முடியாத என்ற விவரத்தை அளிக்கும். இதில் முடியாது என்று சொன்னால் கண்டிப்பாக windows 11 இன்ஸ்டால் ஆகாது. எனவே முயற்சிக்க வேண்டாம். இதில் விண்டோஸ் 11 இன்ஸ்டால் செய்ய இயலும் என்று வந்தால் அக்டோபர் 5 வரை காத்திருக்கவும். அன்றுதான் பல்வேறு கட்ட சோதனைகள் முடிந்து அனைவரின் பயன்பாட்டிற்குமாக விண்டோஸ் 11 வெளியாகிறது. உங்கள் windows 10ல் இருக்கும் ” விண்டோஸ் 11″ அப்டேட் மூலமே விண்டோஸ் 11 இன்ஸ்டால் ஆகும்.

PC Health Check tool
PC Health Check tool

முதல் படம் என் கணிணியை சோதித்து அதில் வந்த முடிவுகள். இரண்டாவது படம் இந்த டூல் சோதித்து கணிணி விண்டோஸ் 11 இன்ஸ்டால் செய்ய தகுதி அற்றது என்பதற்கான படம். இது வேறு ஒரு தளத்தில் இருந்து எடுத்தது.

விண்டோஸ் 11 பற்றிய எனது மற்ற பதிவுகளைப் படிக்க

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.