Huawei mobiles infected with Joker Malware

ஹுவாயி மொபைல்களில் கூகிள் ப்ளே ஸ்டோர் போலவே அவர்களுடைய அதிகாரபூர்வ ப்ளே ஸ்டோர் “App Gallery ” உள்ளது. சமீபத்திய ஹுவாயி மொபைல்களில் கூகிள் ப்ளே ஸ்டோர் வேலை செய்யாது. எனவே ஹுவாயி மொபைல் உபயோகிப்பாளர்கள் ஆப் கேலரியை தான் நம்பி இருக்கின்றனர். இந்த ஆப் கேலரியில் இருந்து இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகள் மூலம் Joker Malware பரவியுள்ளது. வழக்கம்போல் சாதாரண ஒரு செயலியாக காட்டிக்கொண்டு பின்னணியில் மால்வேர் பரப்பும் பணியில் இந்த செயலிகள் ஈடுபடும். கிட்டத்தட்ட 5 லட்சம் மொபைல்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த மால்வேர் பாதிப்பை கண்டுபிடித்தது Dr Web. virtual keyboards, a camera app, a launcher, a messaging app, a sticker collection, colouring programs and a game செயலிகள் போல் இந்த ட்ரோஜன் ஆப் தன்னை மறைத்துக்கொள்ளும். நீங்கள் உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்தவுடன் அது தனது கமாண்ட் & கண்ட்ரோல் சென்டரில் இருந்து தனக்குத் தேவையான விஷயங்களை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளும். மற்ற மால்வேர் போன்று உங்கள் மொபைலில் இருந்து தகவல் திருடப்படும். உங்களுக்கு தெரியாமல் பல செயலிகளுக்கு சந்தா கட்டி ( உங்கள் காசில்தான்) உங்கள் காசை காலி செய்யும். எனவே இந்த Joker Malware பற்றி கொஞ்சம் கவனமாக இருக்கவும்.

திரும்ப திரும்ப சொல்வதுதான் கூகிள் ப்ளே ஸ்டோரை தவிர்த்து வேறு எங்கிருந்தும் செயலிகளை இன்ஸ்டால் செய்ய வேண்டாம். அது ஆபத்திற்கு வழி வகுக்கும்.

About Author