பேஸ்புக் நிறுவனம் ஏற்கனவே பேஸ்புக் லைட் என்ற செயலியை வெளியிட்டிருந்தது. இதற்கும் வழக்கமான செயலிக்கும் இருக்கும் முக்கிய வித்யாசம் மொபைலில் அது எடுத்துக் கொள்ளும் இடம் மற்றும் மெமரி. லைட் செயலிகள் , வழக்கமான செயலிகள் போன்றேதான் இருக்கும் ஆனால் சில வசதிகள் இருக்காது. இதை தொடர்ந்து கடந்த டிசம்பரில் இந்தியாவில் Insta Lite செயலியை அறிமுகப்படுத்தியது. இது இங்கு வெற்றிகரமான சோதனை முடிந்ததில் இப்பொழுது மேலும் 170 நாடுகளில் இதை அறிமுகப்படுத்தியுள்ளது.
Insta Lite vs instagram வித்தியாசங்கள்
Feature | Insta Lite | |
App Size | 30 MB | 2 MB |
Post photo/video | yes | yes |
Post Reels | Yes | No |
View Reels | Yes | Yes |
Special Effects | Yes | No |
Ads | Yes | No |
Android Version | Yes | Yes |
Ios Version | Yes | No |
Live Video | Yes | No |
Direct Messages | Yes | Yes |
மேலே இரண்டு செயலிகளும் இடையேயான வித்தியாசங்களை பார்த்தோம். இது ஆண்ட்ராய்ட் மொபைல்களுக்கான செயலி மட்டுமே. ஆப்பிள் போன்களுக்கான ஐஒஸ் செயலி (lite Version ) உருவாக்கப்படவில்லை. இது யாருக்கு உபயோகம் ? குறைவான மெமரி மற்றும் ஸ்டோரேஜ் இருக்கும் மொபைலை உபயோகப்படுத்துபவர்களுக்கு இது உபயோகமாக இருக்கும்.
அதன் UI ல் இருக்கும் சில மாற்றங்கள் கீழே . இடதுபுறம் இருப்பது இன்ஸ்டா லைட் செயலி
மேலே வலது பக்கம் இருப்பது வழக்கமான இன்ஸ்டாகிராம் செயலி. அதில் போஸ்ட் இல் இருக்கும் வசதிகள் இன்ஸ்டா லைட் செயலியில் இல்லை.