ISRO & mapmyindia to take on Google Maps

கடந்த ஒரு வருடமாய் இந்தியாவிற்கான செயலிகள் இந்தியாவில் உருவாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக ட்விட்டருக்கு போட்டியாக “கூ” செயலி பிரபலம் அடைந்து வரும் நிலையில் இப்பொழுது கூகிள் மேப்பிற்கு பதிலாக இந்தியாவிலியே உருவாக்கப்படும் மேப் செயலி வரும் என்ற அறிவிப்பு வந்துள்ளது.

ISRO மற்றும் mapmyindia நிறுவனம் இணைந்து இந்த செயலியை உருவாக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று DoS (Department of Space ) மற்றும் mapmyindia நிறுவனத்திற்கு இடையில் கையெழுத்தானது.

earth observation datasets, ‘NavIC’, Web Services and APIs (application programming interface) available in MapmyIndia, ‘Bhuvan’, ‘VEDAS’ and ‘MOSDAC’ geoportals போன்று இந்தியாவில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களை கொண்டு இந்த செயலி செயல்படும் என்று தெரிகிறது. இதற்காக இந்திய நேவிகேஷன் சிஸ்டமான NavIC (Navigation with Indian Constellation) உபயோகப்படுத்தப்படும் எனக் கூறியுள்ளனர்.

இது தொடர்பான செய்தி அறிக்கை https://www.isro.gov.in/update/11-feb-2021/mou-signed-with-m-s-ce-info-systems-pvt-ltd-mapmyindia

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.