ஸ்மார்ட் போன்கள் பிரபலமாவதற்கு முன்பு பணி ரீதியாய் மொபைல் உபயோகம் செய்தவர்களின் விருப்பமான மொபைல் ப்ளாக்பெரி. காலத்தின் மாற்றத்தில் தொலைந்து போன ஒன்று. தொழில்நுட்ப ரீதியாக தன்னை மாற்றிக்கொள்ளாத காரணத்தால் மார்க்கெட்டில் மற்ற மொபைல்களுக்கு போட்டியாக ஈடு கொடுத்து நிற்க இயலவில்லை.
OnwardMobility நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய மாடலை கொண்டுவரவுள்ளது. பிரபல மொபைல் நிறுவனமான foxconn பிளாக்பெரியின் மொபைலை தயாரிக்க உள்ளது. வழக்கமான பிளாக்பெரி டிசைனில் எந்த மாற்றமும் இருக்காது. தொடுதிரை பிரபலமான இந்த காலத்திலும் பிஸிக்கல் கீ போர்டுடன் இணைந்த ஸ்மார்ட் போனாக இது வரவுள்ளது.
ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் இது இயங்கும் என்று தெரிகிறது. மற்ற விவரங்கள் ஏதும் இதுவரை வரவில்லை. சரியான விலையில் நல்ல ஸ்பெசிபிகேஷனுடன் வந்தால் கண்டிப்பாய் நன்கு விற்பனை ஆகும். இதுவரை எப்பொழுது இந்த மாடல் வெளிவரும் என்ற செய்தி வரவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்