நம் அனைவருக்குமே தெரிந்த ஒரு கிளவுட் ஸ்டோரேஜ் கூகிள் ட்ரைவ் அதே போல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஒன் ட்ரைவ். இதில் கூகிள் நிறுவனம் தனது இலவச சேவையில் 15 ஜிபி வரை ஸ்டோர் செய்ய அனுமதிக்கிறது. ஆனால் ஒன் ட்ரைவில் 1 ஜிபி மட்டுமே. இதே போன்று பல்வேறு கிளவுட் ஸ்டோரேஜ் உண்டு. ஏற்கனவே இந்திய நிறுவனத்தை பற்றி எழுதியிருந்தேன். அதே போல் இப்பொழுது Jio Cloud Storage பற்றி பார்ப்போம். உங்கள் மொபைலில் இருக்கும் டேட்டாவை அப்படியே பேக் அப் செய்து கொள்ளலாம்.
Jio Cloud Storage மூலம் நீங்கள் 5 ஜிபி வரை இலவசமாக உபயோகப்படுத்தலாம். அதற்கு மேல் தேவைப்பட்டால் நீங்கள் பணம் குடுத்து தேவையான ஸ்டோரேஜை பெற்றுக் கொள்ளலாம். அதே போல் உங்கள் பிரெண்ட்ஸ் ரெபர் செய்து அதன் மூலமும் அதிகப்படியான இடத்தை பெறலாம்.
கூகிள் ஆப் ஸ்டோரில் “Jio Cloud ” என்று தேடினால் இந்த செயலி வரும். இதில் லாகின் செய்ய ஜியோ நம்பர் என்டர் செய்து அதன் மூலம் ஓ டி பி பெற்று ரிஜிஸ்டர் செய்யலாம். முதல் முறை லாகின் செய்தவுடன் உங்கள் மொபைலில் இருந்து எவற்றையெல்லாம் பேக் அப் எடுக்க வேண்டும் என கேக்கும். போட்டோஸ் , வீடியோ, கான்டெக்ட்ஸ் ,மெஸேஜ் என எல்லாவற்றையும் லிஸ்ட் செய்யும். நீங்கள் உங்களுக்கு தேவையானவையை தேர்வு செய்து கொள்ளலாம். அதன் ஸ்க்ரீன்ஷாட் கீழே
அதே நேரத்தில் இதில் உள்ள கோப்புகளை யாருக்காவது பகிரவேண்டுமெனில் அதையும் செய்ய இயலும். Jio Cloud Storage மொபைல் மற்றும் கணிணி இரண்டிலுமே வேலை செய்யும். கணிணியில் இது வேலை செய்ய இங்கிருந்து அதற்குண்டான மென்பொருளை நிறுவலாம்
உங்களில் யாராவது இந்த Jio Cloud Storage உபயோகப்படுத்த போகிறீர்கள் என்றால் லாகின் செய்தவுடன் யாரவது refer செய்தார்களா என்று கேக்கும். அந்த இடத்தில் “YMLJLZ” என்ற Referral Code உபயோகிக்கவும்.