பொதுவாய் சமூக வலைத்தளங்களில் பட்ஜெட் மொபைல்களை பற்றி யாருமே பேசுவதில்லை. பத்தாயிரத்துக்கு கீழே வரும் போன்களை பற்றி யாரும் கவலைப்படுவதே இல்லை போன்று தோன்றுகிறது. புற்றீசல் போல மார்க்கெட்டில் குவிந்து கிடைக்கும் சீன மொபைல்களுக்கு நடுவே இந்திய மொபைல் நிறுவனத்தின் Lava Z61 Pro ஜூலையில் வெளிவந்துள்ளது.
Lava Z61 Pro speicification
ஆரம்பிக்கும் பொழுதே சொல்லிவிடுகிறேன். இது புதியதாக ஸ்மார்ட் போன் வாங்க எண்ணுபவர்களுக்கும் அடிப்படையான வசதி போதும் என்று எண்ணுபவர்களுக்குமான மொபைல். அதிகபட்ச வசதிகளை எதிர்பார்ப்பவர்கள் ஏமாற்றமடைவார்கள்.
ஆன்ட்ராய்ட் பதிப்பு : 9.0 – Pie
ஸ்க்ரீன் அளவு 5.45 இன்ச்
இன்டர்னல் ஸ்டோரேஜ் : 16 ஜிபி ( SD கார்ட் மூலம் 128 ஜிபி)
RAM 2 ஜிபி
sim : DUAL 4G + 4 G
கலர் : சிகப்பு மற்றும் மிட்நைட் ப்ளூ
ரியர் கேமிரா : 8 MP + Flash
செல்பி கேமிரா : 5 MP + Flash
வாரண்ட்டி : மொபைலுக்கு 1 வருடம் , கூட வரும் சார்ஜர் போன்றவற்றிற்கு 6 மாதம்

In the box :
Handset,Headset, Charger,Warranty Card, USB Cable,Battery, Screen guard |
சாதகமான அம்சங்கள்
ஆன்ட்ராய்ட் பதிப்பில் இவர்கள் எந்தவிதமான மாற்றமும் ( customization) செய்யாமல் தருகிறார்கள். இதனால் இயங்கும் வேகம் நன்றாகவே இருக்கும்.
இந்திய மொபைல் என்பது இப்பொழுது ஒரு சாதகம்தான்.
புதிதாய் இப்பொழுதுதான் ஸ்மார்ட் போன் வாங்குவோருக்கு ஏற்ற விலை ( 5,999)
குறைபாடுகள்
இதன் ஸ்டோரேஜ் மிக குறைவு. இன்றைய நிலையில் குறைந்தபட்சம் 32 ஜிபி யாவது தந்திருக்கலாம்.
மொபைலை வாங்க