Manage Whatsapp Storage easily

வாட்ஸ் அப் உபயோகிப்பவரின் பெரிய பிரச்சனையே பலரிடம் இருந்து வரும் படங்கள் / வீடியோக்களினால் மொபைலில் இடம் பற்றாமல் போவதுதான். ஒவ்வொரு முறை அவற்றை அழிப்பதற்கும் கேலரி அல்லது பைல் மேனேஜர் செல்லவேண்டி இருந்தது. வாட்ஸ் அப் செயலியில் இருந்தே தேவையில்லாத மீடியாவை அழிக்கலாம். இதில் இப்பொழுது சில கூடுதல் வசதிகளை வாட்ஸ் அப் செயலி கொண்டுவந்துள்ளது.

வாட்ஸ் அப் செயலியின் மூலம் வந்த மீடியா எவ்வளவு இடத்தை ஆக்கிரமித்துள்ளது என்பதையும் பார்க்க முடியும். அதற்கு உங்கள் செயலியில் வலது மேல் மூலையில் உள்ள ஆப்ஷன்கள் மூலம் “settings ” ஆப்ஷனுக்கு செல்லவும். பின் ” Storage and Data” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்

About Author