இப்பொழுது வீடியோ கான்பரன்சிங் செயலிகள் / இணையத்தளத்திற்குத்தான் அதிக தேவைகள் உள்ளன. இந்திய நிறுவனம் உருவாக்கிய நமஸ்தே, ஜூம், ஸ்கைப் போன்றவை ஏற்கனவே இருக்க, இப்பொழுது பேஸ்புக்கும் இந்த போட்டியில் Messenger Rooms மூலம் குதித்துள்ளது. இவர்கள் எளிதில் இதில் முன்னணியில் வர வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் ஏற்கனவே இருக்கும் மூன்று மெசேஞ்சர் செயலிகளை இவர்கள் இதில் ஒன்றிணைக்க போகின்றனர்.
Messnger Rooms
பேஸ்புக் உபயோகிப்பவர்கள் Messenger Rooms மூலம் புதிதாய் ரூம் உருவாக்கி மற்றவர்களை அதில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேச அழைக்கலாம். இந்த ரூம் பிரைவசி செட்டிங்ஸ் எப்படி வேண்டுமானாலும் மாற்றி வைத்து கொள்ளலாம். அதே போல் பேஸ்புக்கில் இல்லாதவர்களும் இந்த வீடியோ கான்பெரன்சிங்கில் கலந்து கொள்ள இயலும். ரூம்காண லிங்கை மற்றவர்களுக்கு பகிரலாம். ஒரே சமயத்தில் ஒரு ரூமில் 50 பேர் வரை கலந்துகொள்ளலாம். இந்த செய்தியை நேற்று பேஸ்புக் அறிவித்துள்ளது.
முதலில் பேஸ்புக் மற்றும் மெஸெஞ்சரில் மட்டும் ரூம் உருவாக்கும் வசதி தரப்போகிறார்கள். பின்பு இன்னும் சில மாதங்களில் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் இருந்தும் மெஸெஞ்சர் ரூம் உருவாக்கும் வசதி வர உள்ளது. ஆனாலும் பேஸ்புக் ப்ரைவஸி ட்ரேக் ரெகார்ட் திருப்தி அளிக்காத ஒன்று. எனவே எந்த அளவு இது பாதுகாப்பானது எனத் தெரியவில்லை. அதே போல் நம் வீடியோக்களை விளம்பரத்திற்கு உபயோகப்படுத்த மாட்டார்கள் என்ற நிச்சயமும் இல்லை. இந்த அப்டேட் இன்னும் எல்லோருக்கும் வரவில்லை. படிப்படியாக அனைவருக்கும் வரும்.
வாட்ஸ் அப்பில் இருந்து ரூம் உருவாக்க
அதே சமயத்தில் வாட்ஸ் அப்பில் இருந்து Messenger Rooms உருவாக்கவும் வசதியும் சோதனையில் இருப்பதாக தெரிந்துள்ளது. வாட்ஸ் அப் பீட்டா தளத்தில் அதற்கான சோதனை ஸ்க்ரீன்ஷாட் வெளியிட்டுள்ளனர். அதை கீழே பார்க்கலாம்.
முதலில் யாரை கான்பரென்சிங்கில் இணைக்கவேண்டுமோ அவர்களை இணைத்தபின் மெஸெஞ்சரில் இது தொடரும்.
எது எப்படியோ மற்ற வீடியோ கான்பரன்சிங் செயலிகளை இது போட்டியாக அமையும். அதே சமயத்தில் அனைத்து வசதிகளும் ஒரே நிறுவனத்தின் பிடியில் செல்வதும் சரியல்ல.