இப்பொழுது பலரும் உபயோகிக்கும் ஜூம் ஆப் பாதுகாப்பற்றது என உலகம் முழுவதும் சொல்லி வரும் நிலையில் ஒரு இந்திய நிறுவனம் அதற்கு பதிலாக ஒரு வீடியோ கான்பரென்சிங் பிளாட்பார்மை சோதித்து வருகிறது. Inscripts என்ற நிறுவனத்தின் வீடியோ கான்பரன்ஸிங்க் பிளாட்பார்ம் தான் இந்த Namaste
Namaste – Introduction
இது வரை பீட்டா பதிப்பு மட்டுமே வந்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவர் அனுஜ் கர்க் ” பீட்டாவிற்கு முந்தைய பதிப்பை ” பற்றி என்னுடைய பேஸ்புக் பக்கத்தில் மெசேஜ் பதிவிட்டுவிட்டு தூங்க சென்றுவிட்டேன். அடுத்த நாள் காலையில் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கில் டெஸ்ட் செய்ய துவங்கிவிட்டனர். உண்மையில் எங்கள் நண்பர்களும் உறவினர்களும் மட்டுமே இதை சோதித்து பார்ப்பார்கள் என நம்பினேன் என கூறியுள்ளார். சில நாட்களில் இதை உபயோகித்து பார்த்தவர்களின் எண்ணிக்கை 5,00,000 தொட்டது.
புரளி
இதற்கு நடுவில் இது இந்திய அரசின் அதிகார பூர்வ வீடியோ கான்பரென்சிங் பிளாட்பார்ம் என்று ஒரு புரளியை வாட்ஸ் அப்பில் பரப்பி விட்டனர். உண்மையில் இந்திய அரசுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது முழுக்க முழுக்க இந்திய தனியார் நிறுவனத்தின் முயற்சி மட்டுமே.
இப்பொழுது வரை இது பீட்டா பதிப்பில்தான் தான் இருக்கிறது. அடுத்த கட்டமாக இணைய பாதுகாப்பு நிறுவனங்களை கொண்டு பாதுகாப்பு ஆடிட் செய்யப்படும். அதன்பிறகு இதன் குறைகள் சரிசெய்யப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என்று கூறியுள்ளார். ஏப்ரல் 30க்குள் இதன் முழு பதிப்பை வெளியிட முயற்சி எடுத்து வருகின்றனர். ஆன்ட்ராய்ட் மற்றும் ஐஒஸ் செயலிகள் அந்த நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அனுமதி அழைத்தவுடன் பிளே ஸ்டோர் மற்றும் ஐஒஸ் ஸ்டோரில் கிடைக்கும்.
இப்பொழுது இணையதளம் மூலம் மட்டுமே இதை உபயோகப்படுத்த முடியும். மொபைல் ப்ரவுஸரின் மூலமும் இதை உபயோகப்படுத்தலாம். இப்பொழுது உபயோகப்படுத்த மிக எளிதாக உள்ளது. போக போக எப்படி மாறும் எனத் தெரியவில்லை. மாத இறுதி வரை பொறுத்திருந்தால் இது முழுமை பெற்றவுடன் உபயோகப்படுத்தி பார்க்கலாம். இப்பொழுது ஒரு மீட்டிங்கில் 25 பேர் வரை பங்கு பெற இயலும். இது நூறு பேர் வரை விரிவுபடுத்தும் எண்ணமுள்ளது என்று சொல்கிறார்கள்.