மைக்ரோசாப்ட் நிறுவனம் வருடாவருடம் தன் மென்பொருட்கள் சிலவற்றிற்கு சப்போர்ட்டை நிறுத்திவிடும். அதே போல் இந்த வருடம் முதலில் சப்போர்ட்டை நிறுத்தி இருப்பது ஆஃபீஸ் லென்ஸ். இந்த சாப்ட்வெர் படத்திலிருந்து வார்த்தைகளை தனியாக பிரிக்க உதவியது. இதை ஜனவரி 1 2021ல் இருந்து நிறுத்தப்பட்டது. இதை இனிமேல் மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஸ்டோரில் இருந்து இன்ஸ்டால் செய்ய இயலாது.
இதற்கு பதில் மைக்ரோசாப்ட் ஒன் ட்ரைவ் என்ற மென்பொருளை உபயோகித்துக் கொள்ளலாம்.
ஏற்கனவே இதை உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்திருந்தால் தொடர்ந்து உபயோகிக்கலாம். ஆனால் மைக்ரோசாப்ட்டின் க்ளவுட் ஸ்டோரேஜில் சேமிக்க இயலாது.
ஆன்ட்ராய்ட் மொபைல்களில் இந்த செயலி தொடர்ந்து வேலை செய்யும். தேவைப்படுவோர் கூகிள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.