இரு நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப் அப்டேட் செய்தபின் வாட்ஸ் அப்பில் வந்த மீடியாவை ( Photo / Video / Gifs / stickers) ஓபன் செய்ய முயன்ற பொழுது சிலருக்கு “Missing Media ” என்று எரர் காட்டியது. இன்னுமே சிலருக்கு இந்த பிரச்சனை வரலாம். அதே போல் இது வாட்ஸ் அப் பீட்டா உபயோகம் செய்பவர்களுக்கு அதிகம் வந்தது என்றும் ட்விட்டரில் பார்த்தேன். பீட்டா பதிவில்லாமலும் இந்த பிரச்சனை வரலாம்.
எதனால் “Missing media” பிரச்சனை வந்தது ?
இது ஒரு எரர் என்று சொல்வது தவறு. எந்தவித பிரச்சனையும் இதற்கு காரணம் இல்லை. இதற்கு முக்கிய காரணம், வாட்ஸ் அப் தனது மீடியா ஸ்டோர் ஆகும் போல்டரை மாற்றியதே இதற்கு காரணம்.
““/user/WhatsApp/media” என்ற இடத்தில் இருந்து “/user/Android/Media/com.whatsapp/WhatsApp/Media” என்ற போல்டருக்கு மாறியதே காரணம்.
இப்பொழுது உங்களுக்கு எரர் வந்தால் செய்யவேண்டியது
( Don’t do anything if you dont get any error message)
- முதலில் வாட்ஸ் அப் செயலியை மூடவும்
- பைல் மேனேஜரில் “/user/WhatsApp/media” போல்டருக்கு செல்லவும்
- media போல்டரில் இருப்பவற்றை காப்பி செய்து “/user/Android/Media/com.whatsapp/WhatsApp/Media” என்ற போல்டரில் பேஸ்ட் செய்யவும்.
- அதிகமான மீடியா பைல்கள் இருக்கும் பட்சத்தில் இரவு நேரத்தில் இதை செய்வது நலம் ஏனெனில் இது அதிக நேரம் எடுக்கலாம்