இந்திய செயலிகள் குறித்த கட்டுரை தொடரில் அடுத்து Namaste Bharat. உண்மையில் இதற்கு முன்பு கூறிய இரண்டு செயலிகளை விட இது மிகவும் பயன்படுத்தப்படக்கூடிய ஒன்றாகும். பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலிக்கு பதிலாக இதை உபயோகப் படுத்தலாம். இரண்டு நாட்களாக சில வசதிகளை மட்டும் உபயோகப்படுத்தி பார்த்தேன். இன்னும் அதிக நண்பர்கள் உபயோகப்படுத்த துவங்கவில்லை. எனவே பல வசதிகள் நான் இன்னும் சோதிக்கவில்லை. குறிப்பாய் வீடியோ கால் மற்றும் வைட் போர்ட்.
Namaste Bharat – வசதிகள்
வாட்ஸ் அப் செயலியில் இருக்கும் அத்தனை வசதிகளும் இதில் உள்ளது. உங்கள் நண்பர்களுடன் சாட் மற்றும் வீடியோ கால் செய்யலாம். வாட்ஸ் அப்பில் வைக்கும் ஸ்டேட்டஸ் போன்று இதிலும் வசதி உள்ளது. இதில் இப்போதிருக்கும் மிகப்பெரிய பிரச்சனை நோட்டிபிகேஷன் டோன் சரியாக வருவதில்லை. அதே போல் கான்டெக்ட் சிங்க் சரியாக வேலை செய்யவில்லை என்றே தோன்றுகிறது. போக போக சரியாகும் என்று நம்புவோம்.
வாட்ஸ் அப்பில் இல்லாத வசதி மீட்டிங். இதில் நீங்கள் மீட்டிங் செட் செய்து அதை உங்கள் மொபைல் காலண்டருடன் இணைத்துக் கொள்ளலாம். இந்த வசதி Namaste Bharat செயலியில் உள்ள புதிய அம்சம். அதே போல் வீடியோ தரத்தையும் நீங்கள் உங்கள் நெட்ஒர்க் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்து தேர்வு செய்துக் கொள்ளலாம். அதை கீழே உள்ள ஸ்க்ரீன்ஷாட்களில் பார்க்கலாம்.
வாட்ஸ்அப் செயலியில் உள்ளது போன்றே கணினியில் இருந்தே இந்த செயலியை இயக்கலாம். அதற்கு இந்த லிங்கை க்ளிக் செய்யவும் . QR கோட் காட்டும். அதை செயலியில் இருந்து ஸ்கேன் செய்தால் இனி நீங்கள் கணிணியில் இருந்தே நமஸ்தே பாரத் செயலியில் நண்பர்களுடன் உரையாடி மகிழலாம். குறிப்பாய் இது end to end encrypt செய்யப்பட்டது. எனவே பாதுகாப்பானது. தைரியமாய் உபயோகப்படுத்தலாம்.
குறைகள்
குறைகள்னு பார்த்தா ப்ரொபைல் எடிட் பண்ண முடியலை. அதே மாதிரி கான்டெக்ட் சரியா சிங் ஆகலை. UI கொஞ்சம் பெட்டரா குறிப்பா எமோஜி நல்லா இல்லை. ஆனால் எலிமெண்ட்ஸ் பண்ண தப்பை இவங்க செய்யலை. முடிந்தவரை வாட்ஸ் அப்பில் உள்ள அனைத்து வசதிகளையும் கொண்டு வந்துள்ளனர்.
இதை டவுன்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்