இணையத்தில் புதிது புதிதாய் வசதிகள் வர வர அதை உபயோகப்படுத்தி தகவல் திருத்து, ஹேக்கிங் செய்வதும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அதற்கேற்ப மென்பொருள் நிறுவனங்களும் பாதுகாப்பு வசதிகளை அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. எதோ ஒரு செயல் தவறாக போகையில் உங்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் விதத்தையும் நிறுவனங்கள் மாற்றிக் கொண்டே வருகின்றன. விரைவில் வர இருக்கும் Google security Updates இது போன்ற அலெர்ட்ஸ் அளிக்கும்விதத்தை மாற்றி அமைத்துள்ளது.
ஒரு உதாரணத்திற்கு நீங்கள் உங்கள் ஜி மெயில் ஐடியை உங்கள் கணிணி / மொபைல் இல்லாமல் வேறு ஒரு கணிணி அல்லது மொபைலில் லாகின் செய்தால் உடனடியாக உங்களுக்கு மெயில் மூலம் அதை உடனடியாக தெரிவிக்கும். நீங்கள்தான் அதை உபயோகப்படுத்துகிறீர்கள் என்று உறுதி செய்து கொள்ளும். இனி அது மெயிலில் வராமல் ஒரு நோட்டிபிகேஷன் அலெர்ட்டாக வரும். அது கீழே உள்ள GIF படத்தில் விளக்கப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் Google security Updates பயனாளர்களுக்கு கிடைக்கும் என்று பிளாகில் கூறியுள்ளது. ஐ போன் உபயோகிப்பாளர்களுக்கும் இந்த வசதி அப்டேட் ஆகும்.
இனி கூகிள் டைம்லைனில் நீங்கள் சென்று வந்த இடங்களை எடிட் செய்துகொள்ளும் வசதியும் விரைவில் வரும் என்று கூறியுள்ளது.