ஆன்லைன் பிராடு எதுவும் புதிதல்ல. ஆனாலும் தினமும் ஒரு பித்தலாட்டம் புது புது வடிவில் வந்து கொண்டே உள்ளன. பல சமயம் விவரம் அறிந்தவர்களே இந்த மாதிரி பித்தலாட்டங்களுக்கு ஏமாந்து காசை தொலைத்து விடுகின்றனர். livehindustan பத்திரிக்கையின் நிருபர் விஷால் குமார் ருக்கும் இது போன்ற ஒரு பிராட் மெசேஜ் வந்துள்ளது, அந்த மெசேஜ் கீழே படத்தில் உள்ளது. இதுதான் ” New SMS Fraud ” இன் துவக்கம்.
இந்த மெசேஜும் சரி அதில் உள்ள வாடிக்கையாளர் எண்ணும் சரி இரண்டுமே போலி. இந்த எண்ணை நீங்கள் அழைத்தால் அடுத்து அவர்கள் செய்வது, “Any Desk ” என்ற செயலியை டவுன்லோடு செய்ய வைப்பார்கள். இதை நீங்கள் இன்ஸ்டால் செய்து அதில் வரும் ஐடியை அவர்களிடம் கொடுத்து விட்டால் நீங்கள் மொபைலில் செய்யும் அனைத்து அசைவுகளையும் அவர்களால் பார்க்க இயலும்.
எனவே நீங்கள் இந்த விஷயத்தை செய்து விட்டால், பிறகு உங்கள் மொபைலுக்கு வரும் ஓ டி பி எளிதாக அவர்கள் திருட முடியும். இதன் மூலம் உங்கள் வாங்கி விவரங்கள் திருடி எளிதில் பணத்தை திருடலாம். எனவே இந்த மாதிரி மெசேஜ் வந்தால் தயவு செய்து அவற்றை உடனடியாக டெலீட் செய்யவும். மற்றபடி உங்களுக்கு சந்தேகம் வந்தால், உங்கள் சர்வீஸ் ப்ரொவைடரின் அதிகாரபூர்வ வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைக்கவும்.
இந்த குறுஞ்செய்தியில் எத்தனை ஸ்பெல்லிங் மிஸ்டேக் உள்ளது. இதை படித்தப் பின்னும் இதை நம்பினால் என்ன செய்வது.