Nokia 5.3 – Launching this month

Nokia 5.3 ஒரு காலத்தில் இந்தியாவில் கோலோச்சிய நோக்கியா கம்பெனியின் அடுத்த ஸ்மார்ட் போன். இது ஏற்கனவே உலக அளவில் விற்பனைக்கு வந்துவிட்டாலும் இந்தியாவில் இன்னும் அறிமுகப்படுத்த படவில்லை. இந்த மாத இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று வித வர்ணங்களில் (Cyan, Sand, Charcoal) வெளியாகி உள்ளது. Android 10 பதிப்புடன் வந்தாலும் Android 11 கிடைக்கும் என தெரிகிறது.

Nokia 5.3
Nokia 5.3 PC : Nokia.com

RAM 3/4/6 GB என் மூன்று வித ஆப்ஷன்கள் உள்ளது. மேலும் Nokia 5.3யில் Qualcomm® Snapdragon™ 665 இருப்பதால் கண்டிப்பாக போனின் இயங்குதிறன் நன்றாக இருக்கும். மேலும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வசதி இருக்கிறது. அதற்கு மேல் இடம் வேண்டுமென்றால் எஸ் டி கார்ட் மூலம் 512 ஜிபி வரை ஸ்டோரேஜை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

8 MP செல்பி கேமிரா மற்றும் 13 MP பின்புற கேமிரா கொண்டுள்ளது இந்த போன். பின்பக்க கேமிராவுடன்  2 MP depth sensor + 5 MP ultra-wide + 2 MP Macro வசதியும் பிளாஷ் வசதியும் உண்டு .

6.55” இஞ்ச் HD+ டிஸ்பிளே இருப்பதால் கேம் விளையாட படம் பார்க்க வசதியாக இருக்கும். 2 சிம் மற்றும் 1 சிம் என ஆப்ஷன்களுடன் .வர இருக்கிறது. இந்த போனில் நானோ சிம் மட்டுமே உபயோகிக்க முடியும். மேலும் type C USB கனெக்டர் சார்ஜ் பண்ண , கம்பியூட்டருடன் இணைக்க உதவும்.

Nokia 5.3
Nokia 5.3 PC:Nokia.com

இரன்டு வருடங்களுக்கு ஆன்ட்ராய்ட் அப்டேட் கிடைக்கும் எனத் தெரிகிறது.

பாக்சில் என்ன இருக்கும்

Nokia 5.3 device

Quick start guide

Safety booklet

Charger

Headset

Jelly case

Type-C USB cable

SIM tray tool

 Related Article

About Author