Non-Personal Data Governance Framework

நீங்கள் இணையத்தை பயன்படுத்தும் பொழுது உங்கள் விவரங்கள் பல இடங்களில் பதிவாகின்றன. அந்த டேட்டாவை இரண்டு விதமாக பிரிக்கலாம் . ஒன்று தனிப்பட்ட விவரம் ( personal Data ). உங்கள் பெயர் , வயது , மொபைல் எண் , ஈ மெயில் ஐடி இது போன்றவை தனிப்பட்ட விவரங்கள். அடுத்தது Non-Personal Data. மேலே குறிப்பிட்டவை இல்லாத மற்ற விவரங்கள். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் , எந்த ஒரு டேட்டாவை வைத்து ஒரு தனிப்பட்ட மனிதரை அடையாளம் காண முடியாதோ அவை எல்லாம் இதில் வரும் .

Govt Committee on this

சென்ற வருடம் இன்போஸிஸ் நிறுவனர்களில் ஒருவரான கிரிஸ் கோபாலகிருஷ்ணன் தலைமையில் இந்திய அரசு ஒரு கமிட்டி அமைத்தது. அதன் பணி இந்த Non-Personal Data வை எப்படி ஒழுங்குபடுத்துவது என்று டிராப்ட் கொண்டு வர. இப்பொழுதும் அந்த டிராப்ட் வெளி வந்து பல்வேறு நிறுவனங்கள் / மக்களின் கருத்து கேட்பிற்காக உள்ளது. செப்டம்பர் 13ஆம் தேதி வரை இதற்கு நேரம் உள்ளது .

இதில் தனிப்பட்ட மக்களின் கருத்துகளை விட நிறுவனங்களின் கருத்தும் எதிர்ப்பும் அதிகமாக உள்ளது. அதற்கு இதில் உள்ள ஒரே ஒரு விஷயம்தான். இந்த டிராப்டில் கூறியுள்ளது “நிறுவனங்கள் Non-Personal Data வை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் “. அதாவது இந்திய நிறுவனங்களுடன் பகிர வேண்டும் என்பதே எதிர்ப்பிற்கு காரணம். மற்றொன்று இந்த விவரங்களை இந்தியாவில் உள்ள சர்வரில் சேமித்து வைக்க வேண்டும் என்பதும்.

எந்த ஒரு நிறுவனமும் தனது நிறுவனம் சேமிக்கும் எந்த ஒரு டேட்டாவையும் மற்றவைகளுடன் பகிராது. அப்படி பகிர வேண்டுமென்றால் அதற்கென தனிப்பட்ட ஒப்பந்தம் , அதற்கு என்ன காசு என்றெல்லாம் அது தனி வியாபாரம். எனவே இதை பெரு நிறுவனங்கள் கடுமையாக எதிர்க்கின்றன. குறிப்பாய் பேஸ்புக், கூகிள் மற்றும் அமேசான். US-India Business councilஉம் இதை எதிர்த்துள்ளது. இத்தகைய சட்டங்கள் சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதை நிறுத்தி விடும் என்று கூறியுள்ளனர்.

என் கருத்து

எந்த நிறுவனமும் அது கலெக்ட் செய்த விவரங்களை அவர்கள் ஒப்பந்தம் செய்துகொள்ளாத எந்த நிறுவனத்தின் கூடவும் போகிறது. பகிரவும் இயலாது. அதே போல் இந்த டிராப்ட் காப்பிரைட் சட்டத்திற்கு முரணாக உள்ளது போல் தோன்றுகிறது. எனவே இந்த டிராப்ட்டில் உள்ள சில விஷயங்கள் மாறியே ஆகவேண்டும்.

ஏனென்றால் ஒவ்வொரு நிறுவனமும் டேட்டா கலெக்ட் செய்ய பல வகையில் செலவளிக்கிறது. அவற்றை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என சொல்வது சரியல்ல. சமீபத்தில் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய யூனியன் இது தொடர்பாக கொண்டு வந்துள்ள சட்டங்களை பரிசீலிப்பது நலம்.

About Author