கடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் மூலம் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகிறது. அதுவும் 2020ல் கொரானாவினால் வெளியில் செல்ல கட்டுப்பாடுகள் வந்தபிறகு ஆன்லைன் ஷாப்பிங் இன்னும் அதிகரித்து உள்ளது. இணையத்தில் ஏமாற்றுபவர்கள் அதிகம் சுத்துகிறார்கள். அதே போல்தான் இந்த ஆன்லைன் ஷாப்பிங் மூலம் மக்களை ஏமாற்றுபவர்கள் அதிகரித்து உள்ளனர். இதில் பலவகை உண்டு. ஷாப்பிங் தளம் அமைத்து அதன் மூலம் உங்கள் தகவல்களை திருடுவது, போலியான பேங்க் சைட் வடிவமைத்து அதன் மூலம் உங்கள் வங்கி தகவல்களை திருடுவது என்று பலவகை உண்டு. அதுபோல் மற்றுமொரு திருட்டு இதோ.
நேற்று என் மனைவி இணையத்தில் எதோ தேடிக்கொண்டிருந்தபொழுது முதலில் கண்ணில் பட்டது https://www.apviaal.com/ . மிக அதிகமான வேலைப்பாடுகள் செய்யப்பட்ட புடவை எப்படியும் 5000க்கு குறையாது. ஆனால் ஆன்லைன் விலை 3000த்தில் போட்டு இப்பொழுது தள்ளுபடியில் 200 ரூபாய் என போட்டிருந்தனர். லேசாக சந்தேகம் வந்தது. இப்பொழுது கிட்டத்தட்ட அனைத்து ஷாப்பிங் தளங்களிலும் cash on delivery உண்டு. இதில் அந்த வசதி இல்லை. அடுத்து இணையத்தில் அந்த தளத்தை பற்றி தேடினால் பல தளங்களிலும் அதில் காசு கொடுத்து வாங்கிவிட்டு பொருள் வரவில்லை என புலம்பிக்கொண்டிருந்தனர்.

அடுத்தகட்டமாக, அதிலிருந்த ஒரு போட்டோவை இணையத்தில் தேடினால் நிறைய இணையதளங்கள் அதே விலையில் போட்டிருந்தனர். மூன்று தளங்களின் whois தகவலை தேடினேன். எதிர்பார்த்தது போல் கிட்டத்தட்ட ஒரு இடைவெளியில் domain புக் செய்திருந்தனர். அனைத்தும் ஒரே அட்ரஸ்.எனக்குத்தெரிந்து அதுவும் போலியாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.


நண்பர்களே ஆன்லைன் ஷாப்பிங் இன்று இயலாத ஒன்று. பலமுறை சொன்னதுதான் ஒரு தளத்தில் வாங்கும் முன் அந்த தளத்தை பற்றி இணையத்தில் தேடி படிக்கவும். அதன் பின் வாங்குவதை பற்றி முடிவெடுக்கவும்.ஆனால் நம்பிக்கையான தளங்களில் மட்டும் வாங்குங்கள்.