Ransomware என்பதும் ஒருவகையான மால்வேர் தான். பொதுவாய் மால்வேர்கள் ஒரு கணிணியை தாக்கினால் அந்த கணினி மெதுவாய் வேலை செய்யும் அல்லது தானாக பல்வேறு விளம்பரங்கள் (Adware) வரும் இல்லை இலை சிஸ்டம் கோப்புகள் அழிக்கப்படும். இதற்கென்று தனி தனி மென்பொருட்கள் உள்ளன. அவை இத்தகைய மால்வேர்களை அழிக்கவல்லது. ஆனால் இந்த ரேன்சம்வேர் அப்படியல்ல. உங்கள் கணிணியை இந்த ரேன்சம்வேர் தாக்கினால் முதலில் அவை செய்யும் வேலை, உங்கள் கணிணியில் இருக்கும் கோப்புகளை என்க்ரிப்ட் செய்துவிடும். நீங்கள் அவற்றை உபயோகிக்க முடியாமல் செய்துவிடும். அதை சரி செய்யவேண்டுமென்றால் காசு தர வேண்டும் என கேட்கும். ஆனால் காசு கொடுத்தால் அவை சரி செய்யப்படுமா என்றால் தெரியாது / வாய்ப்புக் குறைவு என்றே சொல்லவேண்டும்.
Ransomware ல் இருந்து எப்படி தப்பிப்பது ?
உங்கள் கணிணி ransomware யினால் பாதிக்கப்பட்டிருந்தால் மேலே இருப்பது போன்ற ஸ்க்ரீன் வரும். பொதுவாய் அவர்கள் என்க்ரிப்ட் செய்த கீ கிடைக்காமல் இதை சரிசெய்வது கடினம். இருந்தாலும் சில மென்பொருட்களை முயன்று பார்க்கலாம். காஸ்பர்ஸ்கை மென்பொருள் நிறுவனம் என்க்ரிப்ட் செய்த கோப்புகளை டீக்ரிப்ட் செய்ய சில டூல்களை வைத்துள்ளது. இதன் மூலம் அனைத்து வகையான என்க்ரிப்ஷனும் சரி செய்ய முடியாது. இருந்தாலும் முதலில் முயற்சி செய்து பார்க்கவும். அதற்கான லிங்க் : Decrypt Too.
இந்த டூல்கள் மூலம் முயன்ற பின்னரும் டீக்ரிப்ட் செய்ய முடியவில்லை என்றால் ஒரே வழி கணிணியை பார்மெட் செய்து புதிதாய் இயங்குதளத்தை மீண்டும் இன்ஸ்டால் செய்வதே. இப்படி மீண்டும் இயங்குதளத்தை இன்ஸ்டால் செய்யும் பொழுது, உங்கள் கணிணியில் உள்ள அனைத்து பார்டீசியன்களையும் (c,d,e…) பார்மேட் செய்து இன்ஸ்டால் செய்யவும். இல்லையெனில் மீண்டும் பாதிப்பு வரும். உங்கள் டேட்டா அனைத்தும் போனது போனதுதான்.
Ransomware வராமல் எப்படி பாதுகாப்பது?
- உங்களுக்கு தெரியாத நபர்களிடம் இருந்து வரும் ஈமெயில்களில் இருக்கும் லிங்க் அல்லது அட்டாச்மெண்டை க்ளிக் செய்யாதீர்கள்
- புதிதாய் எந்த ஒரு இணையதளம் சென்றாலும் பாதுகாப்பானதா என உறுதி செய்துகொள்ளவும்.
- தெரியாத வெப்சைட்டில் உள்ள லிங்க் எதையும் க்ளிக் செய்யவேண்டாம்
- அதே போல் இந்த லிங்கை பார்வேர்ட் செய்தால் இலவசமாக ஏதாவது கிடைக்கும் என வரும் மெசேஜ்களை க்ளிக் செய்யாமல் அழித்து விடுவது நலம்
- தெரியாத நபர்கள் தரும் USB பென் ட்ரைவ் உபயோகிக்க வேண்டாம்
- கண்டிப்பாய் கணிணியில் ஒரு anti Virus மென்பொருள் இருப்பது நல்லது.
- பொது இடங்களில் இருக்கும் பப்ளிக் வைபை உபயோகிக்க வேண்டாம். உங்கள் கணிணியை தாக்க அதுவே மிக எளிய வழி