பொதுவாய எந்த ஒரு மெசெஞ்சர் செயலியாக இருந்தாலும் படங்களை எடிட் பண்ண கொடுக்கும் வசதிகள் ஆடியோ கோப்புகளுக்கு தருவதில்லை. சில சமயம் நாம் ஆடியோ பதிவு செய்து அனுப்புகையில் அதில் ஏதாவது தவறு இருக்கலாம். நாம் கவனிக்காமல் அனுப்பி பின் அதை கேட்டு டெலிட்தான் செய்ய வேண்டும். இனி அந்த பிரச்சினை இல்லை.
அதற்காகதான் இந்த வசதியை வாட்ஸ்அப் கொண்டு வரவுள்ளது.இந்த வசதி இப்பொழுது சோதனையில் உள்ளது. இன்னும் அனைவருக்கும் வரவில்லை.
இனி ஆடியோ பதிவு செய்து அனுப்பும் முன்பு கீழே படத்தில் உள்ளது போன்று “Review” என்ற புதிய ஆப்ஷன் வரும். அதை அழுத்தி சரியாக ரெக்கார்ட் ஆகியுள்ளாதா என சரிபார்த்துக் கொள்ளலாம்.
இது குறித்த சிறு வீடியோ
ஏற்கனவே ஆடியோ கேட்கும் பொழுது அதன் வேகத்தை மாற்றுவதற்கான வசதி பீட்டா சோதனையாளர்களுக்கு வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது