Search for Polls – WhatsApp

சமீபத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் சில புதிய வசதிகள் கொண்டு வரப்போவதாக அறிவித்து இருந்தது. அதில் சில வாட்ஸ் அப் கம்யூனிட்டிஸ், 32 பேர் வீடியோ கால் மற்றும் வாக்கெடுப்பு ( Poll). இப்பொழுது தேடுபொறியில் புதிய வசதி வந்துள்ளது. அது Search for Polls. அது எப்படி என பார்ப்போம்

Search for Polls

ஏற்கனவே Poll வசதி கொண்டுவந்தது அனைவருக்கும் தெரியும். இப்பொழுது வாட்ஸ் அப் செயலியில் அந்த Poll தேடுவதை கொண்டு வந்துள்ளனர். இது இப்பொழுது சில பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டுமே வந்துள்ளது. எனவே வாட்ஸ் அப் பீட்டா பதிப்பை உபயோகம் செய்யாவிடில் இந்த வசதி இருக்காது. எனவே ஏமாற்றம் அடைய வேண்டாம்.

வாட்ஸ் அப் செயலியை துவங்கியவுடன் முகப்பில் வலது மேல்புறம் இருக்கும் Search ஐகானை துவக்கவும்.

இப்பொழுது எதை தேட வேண்டும் என்ற தேர்வுகள் வரும். அதில் Polls என்ற ஆப்ஷன் புதிதாய் வந்திருக்கும்.

இந்த ஆப்ஷன் இன்னும் அனைத்து பீட்டா டெஸ்டர்களுக்கும் வரவில்லை. இப்பொழுதுதான் அப்டேட் ஆகி வருகிறது. நீங்கள் பீட்டா டெஸ்டராக இருந்தும் அப்டேட் வரவில்லையென்றால் இந்த வாரம் அப்டேட் வரும்.

About Author