பொதுவாகவே எந்த ஒரு வாட்ஸ் அப், சிக்னல் போல எந்த ஒரு மெசெஞ்சர் சர்வீஸ் உபயோகம் செஞ்சாலும், நாம் போட்டோ அனுப்பறப்ப கம்ப்ரஸ் ஆகும். அதனால் அதோட தரம் குறையும். சில சமயம் நெட் ஸ்பீட் பிரச்சனை , சர்வர் பிரச்சனைன்னு பல காரணங்களால் நாமும் high quality photos அனுப்ப யோசிப்போம். இப்ப இதுக்கு சிக்னல் செயலியில் புது ஆப்ஷன் தந்திருக்காங்க.
இந்த புது ஆப்ஷன் மூலம் நீங்க எப்படி வேண்டுமானாலும் படத்தை அனுப்பலாம். High quality photos அனுப்பலாம். அதே நேரத்தில் நார்மல் போட்டோவாகவும் அனுப்ப முடியும். முதலில் சிக்னல் செயலியை அப்டேட் செஞ்சு லேட்டஸ்ட் வெர்ஷன் இருக்கானு பாத்துக்கோங்க.
- யாருக்கு போட்டோ அனுப்பனுமோ அந்த சாட் விண்டோ ஓபன் பண்ணிக்கோங்க.
- சாட் விண்டோவில் வலது கீழ் பக்க மூலையில் + குறியை க்ளிக் பண்ணுங்க.
- எந்த போட்டோ அனுப்பனுமோ அதை தேர்ந்தெடுக்கவும்.
- இப்ப கீழே இடது பக்கம் போட்டோ ஐகான் இருக்கும் அதை கிளிக் பண்ணுங்க
- எந்த குவாலிட்டில படம் அனுப்பனும்னு கேட்கும் ( high quality / Normal )
- High செலெக்ட் பண்ணி அனுப்புங்க