பொதுவாய் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ப்ரவுஸரான எட்ஜ் பிரவுசரில் புதிதாய் தேடுதல் வசதியை கொண்டு வந்துள்ளது. பொதுவாய் நாம் எதோ ஒரு தளத்தில் ஒரு செய்தியை அல்லது கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் பொழுது அதில் இருக்கும் ஒரு வார்த்தையை அல்லது விஷயத்தை பற்றி தேட வேண்டுமென்றால் அந்த வார்த்தையை தேர்வு செய்து குடை காப்பி செய்து வேறு ஒரு டேபில் சென்று கூகிள் அல்லது வேறு தேடு பொறியில் தேடுவோம். அல்லது அந்த வார்த்தையை தேர்வு செய்து ரைட் க்ளிக் செய்தால் “Search Google” ஆப்ஷன் வரும். அதை தேர்வு செய்தால் மற்றொரு டேபில் அதை பற்றிய செய்திகள் வரும்.
இப்பொழுது மைக்ரோசாப்ட் எட்ஜ் இதை சிறிது மாற்றியுள்ளது. எந்த வார்த்தையை / விஷயத்தை பற்றி தேட வேண்டும் என்றால் அதை தேர்வு செய்து ” Search in bing for *****” என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால் தனி டேபில் ஓபன் ஆகாமல் நீங்கள் இருக்கும் டேபில் (Tab ) பக்கவாட்டில் தேடுதலின் முடிவுகள் காட்டும். தேவையில்லாமல் மற்றொரு டேப் செல்ல வேண்டிய அவசியமில்லை.