Signal App blocked in china?

சமீப காலமாய் புகழ்பெற்று வரும் செயலியான சிக்னல் , இந்து காலையில் இருந்து சீனாவில் ( mainland China) வேலை செய்யவில்லை. நேற்று முதல் அதன் இணையதளமும் சீனாவில் (mainland China) வேலை செய்யவில்லை. எனவே signal App சீனாவில் முடக்கப்பட்டிருக்கலாம் என்றே பலரும் கருதுகின்றனர்.

பொதுவாய் உலகில் பிறநாடுகளில் அதிகம் உபயோகம் செய்யப்படும் எந்தவித செயலியும் சீனாவில் வேலை செய்யாது. அவர்களின் கட்டுப்பாடு அப்படி. ஆனால் இவ்வளவு காலமாய் சிக்னல் செயலி தடைசெய்யப்பாடாமல் இருந்தது. ஐபோனில் மட்டுமே 510,000 முறை டவுன்லோடு செய்யப் பட்டது இந்த செயலி என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இந்த தடை பற்றி அரசாங்கத்திடம் இருந்து எந்தவித அறிவிப்பும் வரவில்லை. ஆனால் இன்னும் signal App சீனா ஆப்பிள் ஸ்டோரில் இருக்கிறது. அதே சமயத்தில் விபிஎன் சிக்னல் செயலி வேலை செயகிறது.

இந்த செயலியின் மெசேஜ் என்க்ரிப்ட் செய்யப்பட்டது என்பதால் அதிகாரிகளால் அவற்றை கண்காணிக்க இயலாது. அதனால் தடை செய்யப்பட்டிருக்கலாம் என்பதே பலரின் கருத்து. இதை பற்றி சிக்னல் நிறுவனமும் இதுவரை எந்த கருத்தும் சொல்லவில்லை

About Author

உங்கள் கருத்துகள்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.