இன்று கூகிள்தான் இணைய தேடுபொறிகளின் முடிசூடா மன்னன். கணிணி ஆகட்டும் அல்லது மொபைலாகட்டும் அனைவரும் பரவலாக உபயோகிப்பது கூகிள் தேடுபொறியே. யாஹூ மற்றும் பிங் இருந்தாலும் அதில் வரும் தேடுதல்களின் முடிவுகள் திருப்தி அளிப்பதாக இல்லை. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் Spotlight தேடுபொறி கூகிளுக்கு போட்டியாக களம் இறங்க உள்ளதாக தெரிகிறது.

இப்பொழுதைய நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் iOS, macOS and iPadOS ஆகியவற்றில் பிரதான தேடுபொறியாக கூகிளை உபயோகிக்க கூகிள் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்திற்கு பல பில்லியன் டாலர்களை தந்து வருகிறது. இது ஏற்கனவே சில நாடுகளில் வழக்கை சந்திக்க காரணமாய் உள்ளது. அதாவது போட்டியாளர்களை முறையற்ற வழியில் ஒதுக்குவதாய் புகார் உள்ளது.
இப்பொழுது பீட்டா சோதனையில் உள்ள iOS 14, ipadOS14 இயங்குதளங்களில் Spotlight தேடுபொறி பிரதானமாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்கள். கூகுளுக்கு போட்டியாக இன்னொரு தேடுபொறி வரவேண்டியது காலத்தின் கட்டாயம். எந்த ஒரு துறையிலும் ஒரே நிறுவனம் கோலோச்சுவது என்றுமே சரியல்ல. தேடுபொறியின் முடிவுகளை கூகிள் தனக்கு சாதகமாக வெளியிடுவதாக புகார் உள்ளது.