அனைவருக்கும் தெரிந்த இசை நிறுவனமான T-Series இப்பொழுது அதிகம் பயன்படுத்தப்படும் வீடியோ செயலிகளுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவர்களது இசை கோப்புகள் அவர்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று சொல்லி கிட்டத்தட்ட 3.5 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
பிரபல செயலிகளான Bolo Indya, Mitron, MX Player’s Takatak, Triller and Josh இந்த நோட்டீஸ் அனுப்பி உள்ளன. இதில் Bolo Indya மட்டும் T-Series நோட்டீஸிற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. தாங்கள் எந்த ஆடியோ அல்லது வீடியோவையும் அளிப்பதில்லை என்றும், பயனாளர்கள் அப்லாட் செய்பவையே அனைத்தும் என்றும் கூறியுள்ளனர். மேலும் லைப்ரரி ( செயலியிலேயே ஆடியோ கோப்புகள் இருக்கும் ) வசதி அளிக்கும் பொழுது முறைப்படி லைசென்ஸ் வாங்கி பயன்படுத்துவோம் என கூறியுள்ளது.
இந்த காப்பிரைட் மேட்டர்லாம் இந்தியாவில் பெரும்பாலானோர் கண்டுகொள்வதே இல்லை. இதே போன்று , கிண்டிலில் புத்தகம் வெளியிடும் பலரும் செய்வது, ஏதாவது நடிகர் / நடிகை போட்டோவை போடுவது. இதுவுமே தவறுதான்.