சின்ன வயசிலிருந்தே என்னைத் தொடர்ந்து வரும் ஒரு பழக்கம் இருப்பதை இந்த சமயத்தில் உணர்கிறேன். தெளிவாக காரண காரியங்களை விளக்கி யாராவது எது குறித்தும் சொன்னால் ஏற்றுக் கொள்ளும் பழக்கம். நானாக என் அனுபவத்தில் அது சரியில்லை என்று உணர்கிற வரை அந்த பழக்கம் என்னுள் பதுங்கியிருக்கும்
Tag: ஜீவி
அழியாத மனக்கோலங்கள் – 14
இலங்கை ‘கதம்பம்’ பத்திரிகை ‘எனக்குப் பிடித்த எழுத்தாளர்’ என்ற போட்டியை நடத்தியது என்றால் குமுதம் ‘எனக்குப் பிடித்த நாவல்’ என்ற போட்டி ஒன்றை நடத்தியது. அந்தப் போட்டியில் பரிசுக்குரிய கட்டுரைகளில் ஒன்றாக எனது கட்டுரை “அழியாத மனக்கோலங்கள் – 14”
அழியாத மனக்கோலங்கள் – 13
அன்று இரவு அசந்து தூங்கினாலும் சீக்கிரமாகவே எழுந்து விட்டேன். எழுந்து பல் விளக்கி காலைக்கடன் முடித்து குளித்து தலை வாரிக் கொண்டிருந்த பொழுது சின்னசாமி உள்ளே நுழைந்தார். “நல்லாத் தூங்கினீங்களா, சார்?” என்றார். “நல்ல “அழியாத மனக்கோலங்கள் – 13”
அழியாத மனக்கோலங்கள் – 12
“எங்கே தங்கப் போறீங்க?.. பேச்சுலரா?.. அப்படின்னா ஆபிஸ்லேயே தங்கிக்கலாமே?.. எதுக்குச் சொல்றேன்னா, இங்கேயே எல்லாம் இருக்கு.. கிருஷ்ணகிரி போய் வருவது தேவையில்லை. அங்கே ரூம் எடுத்தீங்கன்னா அது வேறே செலவு..” என்று எல்லாம் சொல்லி விட்டு, “பாத்து செய்யுங்க..” என்றார் கேண்டீன் உரிமையாளர் ஜவஹர்லால்.. நல்ல பெயரில்லை?.. அவர் அப்பா காங்கிரஸ் காரராம். அதனால் அப்படி பெயர் வைத்தாராம். “எனக்கு ஒரு மகன் மட்டுமே..” என்று சொசுறு தகவலையும் சொன்னார்.
அழியாத மனக்கோலங்கள் – 11
கொஞ்ச நேரத்தில் என்னைக் கூப்பிடுவதாக ஒருவர் வந்து அழைத்துப் போய் இன்னொரு அறைக்குள் போகச் சொன்னார். அந்த அறை தான் தலைமை அதிகாரி அறை போலிருக்கு. அங்கு பாலசுப்ரமணியம் நிற்க அதிகாரி அவரிடம் ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தார். நான் உள்ளே நுழைந்து அவருக்கு வணக்கம் சொன்னேன். அந்த அதிகாரி என்னிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்தார்.
அழியாத மனக்கோலங்கள் – 10
இரண்டாவது அக்கிரஹாரத்தில் நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு பக்கத்து வீட்டில் ஸ்ரீனிவாச அய்யங்கார் என்ற பெரியவர் இருந்தார். அவர் முதல் அக்கிரஹாரத் தெரு முனையில் ஜாப் டைப்ரைட்டிங் நிலையம் ஒன்றை சொந்தத்தில் வைத்திருந்தார். அய்யங்கார் மிகப் “அழியாத மனக்கோலங்கள் – 10”
அழியாத மனக்கோலங்கள் – 9
எங்கள் லிஸ்ட்டில் அந்நாட்களில் வெளிவந்த கிட்டத்தட்ட அத்தனை பருவ இதழ்களூம் இருந்தன. ஆரம்பத்தில் அதிக அலைச்சல் வேண்டாம் என்று எங்கள் தெருவிற்கு அருகாமையில் இருந்த ஏரியாக்களை மட்டும் தேர்தெடுத்தோம். மேட்டுத் தெரு, மரவனேரிப் பகுதி, மூன்றாவது அக்ரஹாரம், கிச்சிப் பாளையம் என்று சின்ன வட்டத்திற்கே இருபது வீடுகள் தேறி விட்டன. இருபது வீடுகளை இரண்டு பகுதிகளாகப் பிரித்ததில் வாங்கிய புத்தகங்களையும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்க முடிந்தது. ஒரு பகுதிக்கு ஆனந்த விகடன் என்றால் இன்னொரு பகுதிக்கு குமுதம் இப்படி. திங்கள், புதன், வெள்ளி ஒரு பகுதி என்றால் செவ்வாய், வியாழன், சனி இன்னொரு பகுதி. ஞாயிறு எங்கள் நடமாடும் நூலகத்திற்கு விடுமுறை.
அழியாத மனக்கோலங்கள் – 8
தட்டச்சு லோயர் கிரேடில் தேர்ச்சிப் பெற்றதும், சுருக்கெழுத்துக்காக இன்ஸ்ட்டியூட் வகுப்புகளுக்குப் போகாமல் இரண்டாவது அக்கிரஹாரத்தில் இருந்த எங்கள் வீட்டுக்கு எதிர்வீட்டில் இருந்தவரிடம் பயிற்சி வகுப்புகளுக்குப் போக ஆரம்பித்தேன். அந்த பயிற்சி வகுப்பில் பயின்ற சோமு என்பவர் பழக்கமானார். சோமு திருமணமானவர். மாடர்ன் தியேட்டர்ஸில் பணிபுரிந்தார். அவருடன் மார்டன் தியேட்டர்ஸைச் சுற்றிப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. மார்டன் தியேட்டர்ஸ் வண்டியில் ஏற்காடு போனோம் இந்தத் தடவை லேடிஸ் ஸீட் என்ற இடத்திற்கு அழைத்துப் போய் அங்கு மந்திரி குமாரி திரைப்படத்திற்காக படப்பிடிப்பு நடந்த இடங்களைக் காண்பித்தார்.
அழியாத மனக்கோலங்கள் – 7
சும்மாச் சொல்லக்கூடாது. ராமச்சந்திரன் பிரமாதமா படங்கள் வரைவான். நெடுக்க நாலு கோடு போட்டு, குறுக்கேயும் பக்கவாட்டிலும் இரண்டு கோடிழுத்து கீழேயும் மேலேயும் வரிவரியா கலர் பென்சிலில் தீட்டிறது தான் ஆரம்ப வேலை. அது என்னவோ தான் வரையும் எல்லாச் சித்திரங்களுக்கும் இப்படித் தான் செய்வான். அப்புறம் கண்ணு, மூக்கு, காதெல்லாம் எப்படி வரும் என்பது எங்களுக்கு தெரியாத பரம ரகசியம். பக்காவா குதிரை, யானை, மனுஷன், மனுஷி, பறவை, பாடகர் என்று வரைந்து விட்டு ‘ஆர் ஏ என்’ என்று இங்கிலீஷில் எழுதி பெயரைச் சுற்றி ஒரு வட்டம் போடுவான். அதான் அவன் ஸ்டைல்.. எங்கள் கூட்டத்தில் அவனை அடிச்சிக்க ஆளில்லை என்று அந்த வயசிலேயே அவனுக்கு தெனாவெட்டு ஜாஸ்தி.
அழியாத மனக்கோலங்கள் – 6
சைக்கிளைத் தள்ளியபடியே ஏற ஏற ஹேர்பின் பெண்டுகள் வளைந்து கொண்டே இருந்தன. ஈ காக்காய் இல்லை. ஹோவென்றிருந்தது. கொஞ்ச தூரம் போனதும், “சைக்கிள்லே ஏறி மிதிடா..” என்றான்.ஏறினேன். மிதித்தேன். அவனும் கூட வந்தான். இப்பொழுது காலுக்கு பெடல் பழக்கப்பட்ட மாதிரி இருந்தது. ஹேண்டில் பாரை இறுகப் பற்றிக் கொண்டு வண்டி சாய்ந்து விடாமல் பேலன்ஸ் பண்ணி மிதித்தேன். மலையின் கீழ்ப் பக்கமோ, மேல் பக்கமோ ஏதாவது வண்டி– லாரி வர்ற சத்தம் கேட்டால் டக்கென்று சைக்கிளிலிருந்து இறங்கி ஓரமாக ஒதுங்கிக் கொள்வோம். சில்லென்று காற்று வீசுகிற சூழ்நிலை உற்சாகமாக இருந்தது. அதற்கடுத்து பத்தே நிமிடங்களில் மலையின் மேல் பகுதிக்கு வந்து ஏரிக்கு வந்து விட்டோம்.