பயணம் மிகவும் சிறப்பாகவே அமைந்தது. இந்தப் பயணம் வழி பஞ்ச் ப்ரயாக் என்று அழைக்கப்படும் ஐந்து சங்கமங்களில் இரண்டு சங்கமங்களை நான் பார்த்ததோடு, உங்களுடனும் பகிர்ந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. உங்களுக்கும் இந்தப் பயணமும், பதிவுகள் வழி சொன்ன தகவல்களும் பிடித்திருக்கும் என நினைக்கிறேன். ஒரு சிலருக்கேனும் இந்தத் தகவல்கள் பயன்படக்கூடும் என்றும் நம்புகிறேன். இந்த பயணம் குறித்த தகவல்களை, பாகீரதி தளம் வழி பகிர்ந்து கொண்ட நண்பர் கார்த்திக் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.
Tag: தேவ் பிரயாக்
கங்கை உருவாகிறாள் – நதிகளின் சங்கமம் – 3
அலக்நந்தா – மந்தாகினி நதிகளின் சங்கமம் மற்றும் ருத்ரநாத் ஜி மந்திர் அனுபவங்கள் மனதில் மகிழ்ச்சியினை உண்டாகியிருக்க, குறுகிய சந்தின் வழி கீழே இறங்கி வந்து கொண்டிருந்தேன். ஒரு ஓரத்தில் சிறு கடை ஒன்று இருக்க, அங்கே இருந்த பலகை ஒன்றில் அமர்ந்து கொண்டு, கடைக்காரரிடம் பேச்சுக் கொடுத்தேன். தேநீர், காஃபி போன்றவை அருந்துவதை தவிர்த்து விட்ட பிறகு எலுமிச்சை ஜூஸ், லஸ்ஸி போன்றவை மட்டுமே அருந்துவதால் அப்படி எதுவும் கிடைக்குமா என்று பார்க்க ஷிக்கஞ்சி கிடைத்தது! ஷிக்கஞ்சி என்பது எலுமிச்சை சாறு, ஷிக்கஞ்சி மசாலா பவுடர், தண்ணீர் (அல்லது) சோடா கலந்து செய்யப்படுவது! எலுமிச்சை ஜூஸுக்கு அக்கா என்று வைத்துக் கொள்ளலாம் 🙂 அதை வாங்கி பருகியபடி கடைக்காரரிடம் பேச்சுக் கொடுத்தேன். ருத்ர ப்ரயாக் அருகே இருக்கும் கார்த்திக் சுவாமி கோவில் செல்ல எனக்கு யோசனை இருந்ததால் அவரிடம் கேட்க அவர் சொன்ன தகவல் என்னை கொஞ்சம் யோசிக்க வைத்தது.
கங்கை உருவாகிறாள் – நதிகளின் சங்கமம் – 2
கங்கை ஆரத்தி பார்த்து வருவோம் என்று இங்கே இருக்கும் நபர் அழைக்க நானும் நடந்து சென்றேன். கூடவே இரண்டு பெரியவர்கள் வந்தார்கள். நான்கு பேருமாக ராம்குண்ட் எனும் படித்துறைக்கு சென்ற போது ஆரத்திக்கான ஏற்பாடுகள் செய்து தயாராக இருந்தார்கள். என்னை உட்கார வைத்து, சங்கல்பம் செய்து பூஜைகள் முடித்து கங்கைக்கு ஆரத்தி எடுக்க வைத்தார்கள்….. மனதுக்கு மிகவும் இதமான சூழலாக அமைந்தது அந்த நிகழ்வு. ஆரத்தி எடுத்த பின்னர் அங்கே படித்துறையில் அரை மணி நேரத்திற்கு மேல் அமர்ந்து கங்கை நதியின் ஒட்டத்தினைப் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தேன். மனதுக்குள் அப்படி ஒரு அமைதி…… அப்படியே அங்கேயே அமர்ந்து கொண்டு இருக்கலாம் என்று தோன்றியது……. நிதர்சனம், மணக் கண் முன்னே தெரிய அங்கிருந்து அனைவருடனும் சேர்ந்து நடக்க ஆரம்பித்தேன். அது ஒரு நீண்ட நடைப் பயணமாக அமைந்தது.
கங்கை உருவாகிறாள் – நதிகளின் சங்கமம் – 1
வருடத்தில் பாதிக்கு மேல், அதாவது குளிர் காலத்தில் (தீபாவளிக்கு அடுத்த நாள் பத்ரிநாத் கோயில் மூடப்பட்டு அடுத்த ஆண்டில் ஏப்ரல் மாதத்தின் கடைசியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் கோவில் மீண்டும் திறக்கப்படுவது வழக்கம். இங்கே அதாவது உத்தரகாண்ட் மாநிலத்தில் இப்படி கோவில் திறப்பதை கப்பாட் திறந்து விட்டார்கள் என்று சொல்வார்கள். சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த வருடம் கோவில் மீண்டும் தரிசனத்திற்காக திறந்தார்கள் என்பதால் பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் செல்லும் பயணிகள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறார்கள். ஹரித்வார் நகரிலிருந்து பத்ரிநாத் கோயில் வரை செல்ல சாலை வசதி உண்டு. தொலைவு சற்றேறக்குறைய 320 கிலோ மீட்டர். ஹரித்வார் நகரின் பேருந்து நிலையத்தின் வாயிலுக்கு வெளியே பேருந்துகள் கிடைக்கும். இந்த பேருந்துகள் அனைத்துமே தனியார் வாகனங்கள் தான். TGMOC LTD (Tehri Garhwal Motors Owners Corporation Limited என்கிற கூட்டமைப்பு தான் இந்த பேருந்துகளை இயக்குகிறது. காலை வேளையில் முடிந்தவரை பத்ரிநாத் வரை செல்லும் பயணிகளை மட்டுமே பேருந்தில் ஏற்றிக் கொள்கிறார்கள்