தேவ் ப்ரயாக்

கங்கை உருவாகிறாள் – நதிகளின் சங்கமம் – 2

This entry is part 2 of 4 in the series கங்கை உருவாகிறாள்

கங்கை ஆரத்தி பார்த்து வருவோம் என்று இங்கே இருக்கும் நபர் அழைக்க நானும் நடந்து சென்றேன். கூடவே இரண்டு பெரியவர்கள் வந்தார்கள். நான்கு பேருமாக ராம்குண்ட் எனும் படித்துறைக்கு சென்ற போது ஆரத்திக்கான ஏற்பாடுகள் செய்து தயாராக இருந்தார்கள். என்னை உட்கார வைத்து, சங்கல்பம் செய்து பூஜைகள் முடித்து கங்கைக்கு ஆரத்தி எடுக்க வைத்தார்கள்….. மனதுக்கு மிகவும் இதமான சூழலாக அமைந்தது அந்த நிகழ்வு. ஆரத்தி எடுத்த பின்னர் அங்கே படித்துறையில் அரை மணி நேரத்திற்கு மேல் அமர்ந்து கங்கை நதியின் ஒட்டத்தினைப் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தேன். மனதுக்குள் அப்படி ஒரு அமைதி…… அப்படியே அங்கேயே அமர்ந்து கொண்டு இருக்கலாம் என்று தோன்றியது……. நிதர்சனம், மணக் கண் முன்னே தெரிய அங்கிருந்து அனைவருடனும் சேர்ந்து நடக்க ஆரம்பித்தேன். அது ஒரு நீண்ட நடைப் பயணமாக அமைந்தது.