ஒன்று ஒருவருக்குச் சொந்தமானது; ஆனால், அதை அவர் உபயோகிப்பதை விட மற்றவர்கள்தான் அதிகம் உபயோகிப்பர்; அது என்ன? ” என்று கேட்டு, அது “அவரது பெயர்” என்று பதில் சொல்வது பிரசித்தி பெற்ற சுவாரசியமான கேள்வி -பதில்.’பெயர்’ என்பது ஒரு மனிதனின் வாழ்வில் மிக மிக முக்கிய அங்கம். அதே பெயர்கள் அடை மொழிகள் சேர்க்கப்பட்டு, சிதைக்கப்பட்டு, சில சமயம் பெயரே காணாமல் போய், ஒரு ஜடப் பொருளோ, ஒரு உயிரினமோ கூட ஒருவரைக் குறிக்கும் அளவு ஆகி விடுவதும் உண்டு. என் அனுபவத்தில், சிறுவயது முதலே இதுகுறித்து மிகவும் வியந்திருக்கிறேன்.
Tag: மேகலா நாராயணன்
கடவுளே! என்னை நாத்திகனாகவே வாழ விடு
புதுக்கருக்கழியாத அந்த மர ஆடு குதிரையை மாயனின் குடிசை வாசலில் பார்த்த நாட்டாமைக்கு வயிற்றைப் பிசைந்தது. அதைத் தன் குழந்தைக்கு வாங்குவதற்கு பணம் சேர்க்க வேண்டும் என இரண்டு மாதங்களாக இரவு உணவைத் தவிர்த்த மாயனின் நோஞ்சான் உடம்பு அவர் நெஞ்சை நெருடியது. இரண்டு நாட்கள் முன்பு ஜமீன்தாரின் பேரனின் காதுகுத்து விழாவில் குழந்தையின் தங்கச் சங்கிலி காணாமல் போனது. “கடவுளே! என்னை நாத்திகனாகவே வாழ விடு”
லைஃப் ஆஃப் பை (Life Of பை)
“கெட்டி மேளம்”… “கெட்டிமேளம்”… என்பதைத் தொடர்ந்து, திருமணம் முடிந்து, நாதஸ்வர வித்வான் “ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே” வாசிக்கும் போதே, “பந்தி போட்டாச்சோ?” என்ற கேள்வி பிறந்தது. “மேடம் இலை போட்டாச்சு – சாப்பிட போங்கோ” “லைஃப் ஆஃப் பை (Life Of பை)”