நான் நன்றி சொல்வேன்..

வர்ரபோன் கால்ஸ் எல்லாம் கடன் கேட்டுத்தான் வருதுங்க. நேத்துமட்டும் நம்மவீட்டுல தோட்டவேலைபார்த்து அப்புறம் சொந்தமா கிராமத்துல தோட்டம் போட்டு வியாபாரம் பண்ணப்போறேன்னு போன வேலுவிலிருந்து சோபா ரிப்பேர் செய்த கார்ப்பெண்ட்டர் கதிரேசன் வரை ஏழெட்டு பேர் கடன்தொகை உதவியா கேக்கறாங்க..கொரானா காலத்துல நீங்களும் ரிடையர் ஆக போற நேரத்துல நாமே அரை சம்பளத்துல குடித்தனம் செய்யறோம் .இருந்தா கொடுக்க வஞ்சனையா என்ன? சொன்னால் புரிஞ்சிக்கக்கூடிய நிலையில் அவங்களும் இல்ல..உதவமுடியலையேன்னு எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. அதனாலதான் இந்த போனை நான் அட்டெண்ட் பண்ணல” என்று வேதனையுடன் சொன்னாள் மாலதி.